உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வேறு துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி என குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்ட நிலையில், உயர்கல்வித்துறையின் புதிய அமைச்சராக கோவி.செழியன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் என குறிப்பிடுவதற்கு பதிலாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி என குறிப்பிடப்பட்டுள்ளது.
பெயர் மட்டுமின்றி பொன்முடியின் புகைப்படமும் அந்த அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக் கழகத்தின் இணையதளத்திலும் துறை அமைச்சரின் விவரங்கள் மாற்றப்படாமல் இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.