பரிதவிக்கும் வியாபாரிகள் : பயன்பாட்டிற்கு வராத நவீன மீன் அங்காடி - சிறப்பு கட்டுரை!
Sep 14, 2026, 12:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பரிதவிக்கும் வியாபாரிகள் : பயன்பாட்டிற்கு வராத நவீன மீன் அங்காடி – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 6, 2024, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மீனவ மக்களின் பயன்பாட்டிற்காக சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை பட்டினம்பாக்கத்தில் கட்டப்பட்ட மீன் அங்காடி, திறக்கப்பட்டு 50 நாட்களை கடந்தும் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கிறது. நவீன மீன் அங்காடி பற்றியும், அதில் உள்ள குறைபாடுகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

சென்னையில் பொதுமக்கள் அதிகளவு கூடக்கூடிய இடங்களில் ஒன்று பட்டினம்பாக்கம் மீன்சந்தை. சாலையின் இருபுறங்களிலும் வைக்கப்பட்டிருந்த மீன் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில், அது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. அவ்வழக்கு விசாரணையின் போது போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள மீன் கடைகளை முழுவதுமாக அகற்றுவதோடு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி சென்னை பட்டினம்பாக்கத்தில் 14.93 கோடி ரூபாய் மதிப்பில் 360 கடைகளுடன் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியை கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு 50 நாட்களை கடந்தும் தற்போது வரை மீனவர்களின் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கிறது.

சாலைகளில் நடைபெறும் மீன் விற்பனை, மீன் அங்காடிக்குள் இருக்காது எனவும், தற்போது திறக்கப்பட்டுள்ள மீன் அங்காடியில் போதுமான இடவசதி இல்லை எனவும் மீன் விற்பனையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக மீன் அங்காடிக்குள் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதிலும் முறைகேடு நடந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்களுக்கு விருப்பமில்லாத மீன் அங்காடிக்குள் செல்லுமாறு கட்டாயப்படுத்தினால் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ள மீன் விற்பனையாளர்கள், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் மீன் விற்பனைக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags: fish marketModern fish shopChennaitamil nadu governmentPattinambakkam
Share
Tweet
SendShare
Previous Post

வான் சாகச நிகழ்ச்சியை காண சென்ற 60 வயது முதியவர் உயிரிழப்பு!

Next Post

இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

Related News

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies