புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையை தொடர்ந்து பிரெஞ்சு துணை தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனை இ-மெயிலுக்கு மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் வந்தது. இதனையடுத்து மருத்துவமனை முழுவதும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆனால் அது போலியான மிரட்டல் என தெரியவந்தது. இந்நிலையில் கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். புதுச்சேரியில் தொடர்ந்து 2-வது நாளாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.