ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காததால் அமைச்சர் பொன்முடி ஆவேசம் அடைந்தார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனை கூட்டம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆனால், துறைசார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொள்ளாததால், அமைச்சர் பொன்முடி அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உயர் அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, வடிகால் வாய்க்காலை ஆய்வு மேற்கொண்ட அவரிடம், மழைநீர் வடிகால் வெளியேறக்கூடிய தண்ணீர் முழுவதும் அங்குள்ள சிவன் கோவில் உள்ளே செல்கிறது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், அதனை கண்டுகொள்ளாமல் பொன்முடி நகர்ந்து சென்றார்.