கள்ளக்குறிச்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோவை நிறுத்திய ஓட்டுநர்களுக்கு நூதன முறையில் தண்டனை வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி நகர பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க காவல்துறை முடிவு செய்தது.
இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 15 ஆட்டோக்கள் காவல் நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டன. மேலும் “போக்குவரத்துக்கு இடையூறாக இனி ஆட்டோவை நிறுத்தமாட்டேன்” என ஆட்டோ ஓட்டுநர்களை எழுதி படிக்க வைத்து போக்குவரத்து போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.