வேலூர் அருகே உள்ள பொய்கை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மழை நீர் உள்ளே புகுந்ததால், அங்குள்ள முக்கிய சான்றிதழ்கள் உள்ளிட்டவை நீரில் நனைந்து சேதமடைந்துள்ளன.
வேலூர் மாவட்டத்தில், தொடர் மழை காரணமாக பொய்கை ஊராட்சி மன்ற அலுவகத்தின் கான்கிரீட் கூரையில் இருந்து மழை நீர் வடிந்து வருகிறது.
மேலும், தாழ்வான பகுதியில் அலுவலகம் உள்ளதால் வெளியில் தேங்கிய மழைநீர் அலுவலகத்தின் உள்ளே புகுந்துள்ளது.
இதனால், அலுவலகத்தின் உள்ளே இருந்த கணினி பேட்டரிகள், 100 நாள் வேலை அட்டைகள் மற்றும் முக்கிய சான்றிதழ்கள் நீரில் நனைந்து சேதமடைந்துள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொய்கை ஊராட்சி தலைவர் வெங்கடேசன், மிகவும் பழமையான, இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை என்று வேதனை தெரிவித்தார்.