அகஸ்தியர் அருவியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராமல், கட்டணம் வசூலில் வனத்துறை குறியாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டினர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம், பாபநாசம் வன சோதனை சாவடியில் நபர் ஒன்றுக்கு 30 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.
ஆனால், அருவிக்கு செல்லும் 2 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள மலைச்சாலை மிகவும் மோசமாக இருப்பதுடன், இங்குள்ள கழிவறையின் கதவு மற்றும் சுவர்கள் அனைத்தும் உடைந்த நிலையில் உள்ளன.
மேலும், கழிவறை சுற்றி செடி, கொடிகள் மண்டி புதர்போல காட்சியளிக்கிறது. எனவே அருவிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என சுற்றுலா பயணிகள் எழுந்துள்ளது.