கரகர....மொறுமொறு...கமகம : தலைமுறை தாண்டி தடம்பதித்த செட்டிநாட்டு பலகாரம் - சிறப்பு கட்டுரை!
Sep 5, 2026, 09:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரகர….மொறுமொறு…கமகம : தலைமுறை தாண்டி தடம்பதித்த செட்டிநாட்டு பலகாரம் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 26, 2024, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் செட்டிநாட்டு பலகாரங்களுக்கு தனி இடம் உண்டு. பாரம்பரிய சுவை கொண்ட செட்டிநாட்டு பலகாரங்களை விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதற்கான ரகசியம் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்….

செட்டிநாடு என்பது தமிழ்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் சிவகங்கை மாவட்டத்தில் 56 ஊர்களையும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 ஊர்களையும் உள்ளடக்கியது. அந்த செட்டிநாட்டின் உணவு வகைகளுக்கு அறிமுகம் தேவையில்லை. சமையல் கலைக்கு புகழ் பெற்ற செட்டிநாட்டு பலகாரங்கள், உலக அளவில் மிகவும் புகழ் பெற்றவை. வருடம் முழுவதும் தயாரிக்கப்படும் இவ்வகை செட்டிநாட்டு பலகாரங்கள் தீபாவளி பண்டிகை காலங்களில் அதிகமாக அனைவராலும் விரும்பி வாங்கிச் செல்லப்படுவது வாடிக்கையாக உள்ளது.

குறிப்பாக, காரைக்குடி அருகே கோட்டையூர், பள்ளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காரம், இனிப்பு என பல்வேறு பாரம்பரிய செட்டிநாட்டு பலகாரங்கள் அதிக அளவில் செய்யப்படுகின்றன. லாபத்தை விட தரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் இன்று வரை இங்கு தயாரிக்கப்படும் பலகாரங்களுக்கு எப்போதும் கிராக்கி உண்டு என்கிறார் பலகாரங்கள் தயாரிக்கும் முத்துக் கருப்பி….

அனைத்து செட்டிநாட்டு பலகாரங்களும், இயந்திரங்கள் இல்லாமல் பாரம்பரிய முறையில், உரலில் மாவுகளை இடித்து, கைகளால் முறைப்படி சலித்து பக்குவத்துடன் தயாரிக்கப்படுகின்றன. செட்டிநாட்டு சுவைக்காக, பல இடங்களில் இன்றும் விறகு அடுப்புகளில் தான் பலகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், சுத்தமான செக்கு எண்ணெய்யில் தயாரிக்கப்படுவதால், உடலுக்கு எந்தக் கெடுதலும் வராது என பலரும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

காரைக்குடியை சுற்றி வசிக்கும் பெண்கள், செட்டிநாட்டு பலகாரங்கள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல பெண்களின் குடிசை தொழிலாகவே இது மாறியுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் செட்டிநாடு பலகாரங்கள், தமிழ்நாடு மட்டுமின்றி, பெங்களூர், கேரளா போன்ற வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. மேலும், சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் செட்டிநாட்டின் பலகாரங்கள் அனுப்படுகின்றன.

கல்யாண முறுக்கு, 5, 7 மற்றும் 9 வரிசை கொண்ட தேன் குழல் முறுக்கு வகைகள், அதிரசம், மண ஓலம் , மாவு உருண்டை, சீடை, சீப்பு சீடை, தட்டை, கை முறுக்கு, காரா பூந்தி, மிக்சர் உள்ளிட்ட செட்டிநாடு பலகாரங்கள் மிகவும் பிரபலமானவை என்கிறார் வாடிக்கையாளர் மெய்யப்பன்.

கல்யாண சீர் முதல் வளைகாப்பு சீர், தீபாவளி சீர் என வீட்டு சுப நிகழ்ச்சிகளில். பாரம்பரிய சுவையுடன் தயாரிக்கப்படும் செட்டிநாட்டு பலகாரங்களுக்குக் எப்போதும் தனி இடம் உண்டு. மேற்கத்திய பண்டங்களைச் சாப்பிடப் பழகி இருந்தாலும், விசேஷ தினங்களில், சுவையையும் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரக் கூடிய செட்டிநாடு பலகாரங்களை வாங்குவதில்தான் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tags: KaraikudiChettinad sweetsChettinad Palakarasdeepavalisivagangaipudukottai
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையில் யானை நடமாட்டம் – பொதுமக்கள் அச்சம்!

Next Post

கடற்படையில் மிரட்டும் இந்தியா : 4-வது அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் ரெடி – சிறப்பு கட்டுரை!

Related News

கே.என் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies