புதிய வசதிகள் சேர்ப்பு! : வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை தொடங்குவதில் தாமதம்!
Sep 12, 2026, 10:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புதிய வசதிகள் சேர்ப்பு! : வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை தொடங்குவதில் தாமதம்!

Murugesan M by Murugesan M
Nov 25, 2024, 03:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வடிவமைப்பு மாற்றங்கள் காரணமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் உற்பத்தியில் எதிர்பாராத தாமதம் ஏற்பட்டுள்ளது. என்ன மாதிரியான புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. நாடெங்கும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்ஸை தொடர்ந்து வந்தே பாரத் சேர் கார் (CHAIR CAR ) அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை தயாரிப்பதில் இந்திய ரயில்வே வேகமாக செயல்பட்டு வருகிறது.

நீண்ட தூர பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வழக்கமான ஸ்லீப்பர் ரயில்களில் இருந்து வேறுபட்ட உயர்தர நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாராகி வருகின்றன.

அதிவேகம் மற்றும் அதீத செயல்திறன், நவீன உள்வடிவமைப்பு, உயர் ரக குளிர் சாதன வசதிகள், வைஃபை மற்றும் INFOTAINMENT அமைப்புக்கள், USB சார்ஜிங் வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஜிபிஎஸ் அடிப்படையிலான தகவல் அமைப்புகள் மற்றும் பயண பாதுகாப்பு என பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் அமைக்கப்பட்டுள்ளன.

மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் 11 ஏசி மூன்றடுக்கு, நான்கு ஏசி இரண்டு அடுக்கு மற்றும் ஒரு ஏசி முதல் வகுப்பு,என மொத்தம் 16 பெட்டிகள் உள்ளன. இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் சுமார் 823 பயணிகளுக்கான பெர்த்கள் அமைக்கப்பட்டுள்ளன.

2023ம் ஆண்டு, 55,000 கோடி ரூபாய் மதிப்பிலான 200 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களுக்கான விநியோக மற்றும் பராமரிப்பு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

1,920 வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளைத் தயாரிப்பதற்கு Transmashholding என்ற ரஷ்ய நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்த ஆண்டு இறுதிக்குள் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் முதல் முன்மாதிரி வரும் என்று திட்டமிடப் பட்டிருந்தது. இந்தச் சூழலில், இந்திய ரயில்வே, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வடிவமைப்பில் புதிய திருத்தங்களை முன் வைத்தது.

கூடுதல் கழிப்பறைகள், லக்கேஜ் மண்டலங்கள் மற்றும் ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு பேண்ட்ரி கார் உள்ளிட்ட இந்த மாற்றங்களைச் செய்வதற்கு ரஷ்ய நிறுவனம் ஒப்புக் கொண்டது.

ஆனால், எதிர்கால சட்ட சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக புதிய ஒப்பந்தம் போடுமாறு இந்திய ரயில்வே துறைக்கு ரஷ்ய நிறுவனம்கேட்டு கொண்டுள்ளது. இதற்கான ஒப்புதல் இந்திய ரயில்வே துறையின் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாகவே, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் டெல்லியில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தலைமையில், இந்திய-ரஷ்ய உயர் அதிகாரிகள் இடையேயான வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல் மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தயாரிப்பு தாமதமாவதற்கான காரணங்கள் பற்றி விவாதிக்கப் பட்டதாக கூறப் பட்டுள்ளது.

இந்திய ரயில்வே துறையின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் உற்பத்தியை தொடங்க உள்ளதாக ரஷ்ய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Kirill Lipa தெரிவித்துள்ளார்.

நவீனமயமாக்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களுக்கு இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் எனத் தெரியவருகிறது.

Tags: vandhebharathexpressICFAdding new features! : Vande Bharat sleeper train service starts delayed!
Share
Tweet
SendShare
Previous Post

லிங்காபுரம் பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சம்!

Next Post

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய மனு! : ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies