நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை ஃபெங்கல் புயலாக வலுப்பெறவுள்ளது. தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 13 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னை – நாகப்பட்டினம் இடையே இந்தப் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும், சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.