உதகையில் லஞ்ச வழக்கில் சிக்கிய நகராட்சி ஆணையருக்கு நெல்லை மாநகராட்சியின் துணை ஆணையராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி ஆணையராக ஜஹாங்கிர் பாஷா என்பவர் பணியாற்றி வந்தார். இவர் காரில் பயணித்தபோது சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், கணக்கில் வராத 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, ஜஹாங்கிர் பாஷா மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், ஜஹாங்கிர் பாஷாவுக்கு திருநெல்வேலி மாநகராட்சியின் துணை ஆணையராக பொறுப்பு வழங்கப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
லஞ்ச வழக்கில் சிக்கிய நபருக்கு துணை ஆணையராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.