சென்னை ஓஎம்ஆர், இசிஆர் சாலைகளில் மட்டும் மதியத்திற்கு மேல் பேருந்துகள் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை பெருநகர பேருந்து போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புயல் கரையைக் கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை, ஓ.எம்.ஆர். சாலையில் பொதுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(NEXT) அதேபோல் ரயில் சேவையிலும் மாற்றம் என்பது தற்போது வரை செய்யப்படவில்லை.
(NEXT) இருப்பினும் காற்றின் வேகத்திற்கு ஏற்ப ரயில் சேவையில் மாற்றம் இருக்கும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(NEXT) இந்த புயல் காரணமாக சென்னையில் ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றவும், மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும் அரசு சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. (CARD OUT)…