நாசா தலைவராக ஜாரெட் ஈசாக்மேனை நியமனம் செய்து டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து பல்வேறு பதவிகளுக்கு ஆட்களை அவர் நியமித்து வருகிறார்.
அந்தவகையில், நாசாவின் தலைவராக ஜாரெட் ஈசாக்மேனை நியமித்துள்ளார். இவர் ஷிப்ட்4 என்ற ஆன்லைன் பணபரிமாற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.