மதுரை மாநகரில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலால், ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
பசுமலை அருகில் குடிநீர் குழாய் பள்ளம் தோண்டும் பணியால், ஒரு புறத்தில் சாலை அடைக்கப்பட்டுள்ளது.
இதனால், பழங்காநத்தம் முதல் திருப்பரங்குன்றம் வரை உள்ள சாலையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும், முகூர்த்த நாள் என்பதால், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.