சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதி கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால், சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடலூர் மாநகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு ஆட்டோவில் பயணித்த மாவட்ட நிர்வாகத்தினர், அங்குள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஒலிபெருக்கு மூலம் அறிவித்தனர்.
மேலும் தேவையின்றி தென் பெண்ணை ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.