அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை காலை 10.30 மணியளவில மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர் அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனக் கூறியுள்ளார். தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பெண்கள், சிறுமிகள், வயதானோர் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.