மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு தொடங்கியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் madurai.nic.in-ன் என்ற இணையதளத்தில் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர். தொடர்ந்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள இ-சேவை மையத்தில் காளை உரிமையாளர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்தனர்.