டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் அறிவிக்கிறது.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரியில் முடிவடைகிறது. வரும் தேர்தலில் பாஜக, ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. ஒவ்வொரு கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெற ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன.
இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று பிற்பகலில் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. அதன்படி பிற்பகல் 2 மணிக்கு தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் அட்டவணையை வெளியிடுகின்றனர்.