பிப்ரவரி 5-இல் ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜனவரி 10ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. ஜனவரி 18 இல் வேட்பு மனு மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் ஜனவரி 20ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5இல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிப்ரவரி 8இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.