40 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழ்க்கை : இருளில் தவிக்கும் மக்களுக்கு கிடைக்குமா தீர்வு?
Sep 12, 2026, 11:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

40 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழ்க்கை : இருளில் தவிக்கும் மக்களுக்கு கிடைக்குமா தீர்வு?

Murugesan M by Murugesan M
Apr 29, 2025, 12:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 40 ஆண்டுகளாக மின்சார வசதி இன்றி இருளில் வாழ்ந்து வரும் மக்கள் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் ஆண்டியப்பனூர் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட 29 கிராமங்களில் ஐயங்கொல்லை கிராமமும் ஒன்றாகும். காப்புக் காட்டிற்கு உள்ளே ஒரு மூலையில் அமைந்துள்ள இந்த கிராமத்திற்குச் சென்று வருவதே, சற்று கடினம்தான்.

இந்த ஊரில் 50-க்கும் மேற்பட்ட மக்கள்  வசித்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு பகுதியிலிருந்து இந்த கிராமத்தில் இவர்கள் குடியேறி உள்ளனர். இவர்களின் முதன்மை தொழிலே ஆடு, மாடுகளை வைத்து விவசாயம் செய்து பிழைப்பு நடத்துவது தான். எந்தவொரு அடிப்படை வசதியும் இன்றி தவிக்கும் இவர்களுக்கு, இன்று வரை மின்சார வசதியும் இல்லை என்பது அவலத்தின் உச்சமே. இரவில் நிலவின் ஒளியில் வாழும், இவர்களுக்கு வெளிச்சம் அளிப்பது மண்ணெண்ணெய் விளக்குகளும், டார்ச் லைட்டும் தான்.

இவர்கள் பயன்படுத்தும் செல்போன்களுக்கு சார்ஜ் போட கூட 7 கிலோ மீட்டர் தூரம் சாகச பயணம் செய்து  ஆண்டியப்பனூருக்கு செல்லும் நிலையே உள்ளது. தனித் தீவில் வசிக்கும் இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் அதிமுக ஆட்சியின் போது ஊராட்சி நிர்வாகம் சோலார் மின் வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆனால் அவையும் சில ஆண்டுகள் கூட தாக்குப் பிடிக்காமல் பழுதாகி விட்டதாகத் தெரிவிக்கின்றனர் ஐயங்கொல்லை
கிராம மக்கள். இதனால் தங்களின் பிள்ளைகள் கல்வி கற்பதிலும்  சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளை அள்ளி கொடுக்கும் அரசியல் கட்சிகளோ தங்களிடம் இருந்து வாக்குகளைப் பெற்று ஏமாற்றத்தையே அளிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் ஐயங்கொல்லை கிராம மக்கள். தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அரசு உடனடியாக செய்து தர வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

40 ஆண்டுகளாக மின்சாரமின்றி தவிக்கும் ஐயங்கொல்லை கிராம மக்களுக்கு மின்சாரத்தின் மூலம் அரசு விடியலைத் தருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags: tamil janam tvதிருப்பத்தூர் மாவட்டம்Living without electricity for 40 years: Will there be a solution for people suffering in the dark?
Share
Tweet
SendShare
Previous Post

கரூர் : வழக்கறிஞர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது!

Next Post

மும்பை இந்தியன்ஸ் அணி புதிய சாதனை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies