ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் - மூக்கை உடைத்த இந்தியா!
Aug 7, 2026, 09:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

Murugesan M by Murugesan M
Jul 26, 2025, 06:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பயங்கரவாதத்திற்கு ஆதரவான பாகிஸ்தான் செயல்பாடுகளை மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் அம்பலப்படுத்தியுள்ளது இந்தியா. ஐநா பாதுகாப்பு அவையில் பாகிஸ்தான் மீது இந்தியா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தற்போது முன்வைத்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

இந்தியா சுதந்திரம் பெற்ற அதே நேரத்தில்தான் பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றது. ஆனால், இந்த 78 வருடங்களில் இந்திய அடைந்த பொருளாதார வளர்ச்சியில் பாதியளவைக் கூட பாகிஸ்தானால் எட்டி பிடிக்க முடியவில்லை.

எந்தெந்த நாடுகளுக்குச் சென்று எந்தெந்த துறைகளில் வளர்ச்சிக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம் என இந்தியத் தலைவர்கள் யோசித்துக்கொண்டிருக்கும்போது, எந்த நாடுகளுக்குச் சென்று எவ்வளவு கடன் வாங்கலாம் எனப் பாகிஸ்தான் தலைவர் சீரியசாக சிந்தித்தபடி உள்ளனர்.

மேலும், ”எங்கள் நாட்டின் பொருளாதார நிலை அதலபாதாளத்தில் உள்ளது.
எனவே, தயவு செய்து கடன் தந்து உதவுங்கள்” என ஓயாமல் சர்வதேச நாணய நிதியத்தின் கதவைப் பாகிஸ்தான் தட்டியபடி உள்ளது.

இதனால், ஒருபுறம் இந்தியப் பொருளாதாரம் அசுர வேகத்தில் உயர்ந்துகொண்டிருக்க, மறுபுறம் பாகிஸ்தான் கடன் மதிப்பு படு பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிது.  பாகிஸ்தானை எந்த நாடும் அரவணைத்துக் காப்பாற்றத் தயாராக இல்லை. ஏனென்றால் அந்நாட்டின் track record அப்படி.

ஆனால், எத்தகைய பொருளாதார சிக்கல் ஏற்பட்டபோதும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, பயங்கரவாத செயல்களுக்கு அபயக்கரம் நீட்டப் பாகிஸ்தான் எப்போதும் தவறியதில்லை. பாகிஸ்தானின் இந்த பயங்கரவாத ஆதரவு முகத்தைத்தான், இன்று சர்வதேச அரங்கில் கிழித்துத் தொங்கவிட்டுள்ளது இந்தியா.

ஐநா பாதுகாப்பு அவையின் தலைவராகப் பாகிஸ்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்த்து வைப்பதன் மூலம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இதற்குப் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் தலைமை வகித்தார்.

அப்போது பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்தும், சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது குறித்தும் கருத்துகளைத் தெரிவிக்கத் தொடங்கினார். இதற்குப் பதிலளித்த, ஐநாவுக்கான நிரந்தர இந்தியத் தூதரான பர்வதநேனி ஹரிஷ், உலகளாவிய அமைதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றால், பயங்கரவாத விவகாரங்களில் நாம் சிறிதும் சகிப்புத் தன்மை காட்டக் கூடாது என கூறினார்.

முன்னேற்றம், செழிப்பு, வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நாடு இந்தியா என்பதை உலக நாடுகள் அறிந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கு நேர்மாறான தோற்றத்தைப் பாகிஸ்தான் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும், மதவெறி மற்றும் பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் மூழ்கியுள்ளதாகவும் ஐநாவுக்கான நிரந்தர இந்தியத் தூதர் கடுமையாக விமர்சித்தார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொடர்ந்து கடன் வாங்கும் நாடு பாகிஸ்தான்தான் எனவும், அண்மையில்கூட 8 ஆயிரத்து  600 கோடி ரூபாயை பாகிஸ்தான் பெற்றுள்ளதாகவும் கூறினார். இதன்மூலம், சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் பெற்ற ஒட்டுமொத்த கடன், 18 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வளர்க்கும் நாடாகவும், சர்வதேச உறவுகளை மதிக்காத நாடாகவும் பாகிஸ்தான் உள்ளதாகத் தெரிவித்த பர்வதநேனி ஹரிஷ், இதற்காகப் பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றியும் விளக்கிய அவர், பாகிஸ்தான் விடுத்த வேண்டுகோளின் பேரில்தான் இந்தியா தாக்குதல் நடவடிக்கையை நிறுத்தியதாகத் தெரிவித்தார்

இப்படி, பக்கம் பக்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாகிஸ்தானின் உண்மை முகத்தை இந்தியா அம்பலப்படுத்தியுள்ளது. நியாயமாகப் பார்க்க போனால் இதனைப் பாகிஸ்தான் தனக்கு இழைக்கப்பட்ட இழிவாகக் கருத வேண்டும். ஆனால், பாகிஸ்தான் அவ்வாறு எல்லாம் கருதாது. “யார் வேண்டுமானாலும் திட்டட்டும். எப்படி வேண்டுமானாலும் இழிவுபடுத்தட்டும். நாம் கேட்ட கடன் தொகை சேதாரமில்லாமல் கிடைத்தால் சரி” என்பதுதான் அந்நாட்டின் எண்ணமாக இருக்கும்.

ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் குற்றச்சாட்டுகள் பல்வேறு நாடுகளை யோசிக்க வைத்துள்ளன. அதே நேரத்தில், பாகிஸ்தான் கேட்டபோதெல்லாம் இனி கடன் கிடைக்காது. அதன் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகளும் உலக நாடுகளால் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

Tags: மூக்கை உடைத்த இந்தியாஐ.நா. அவைindia newspakistan news todayPakistan scolded in the UN - India broke its noseசீண்டிய பாகிஸ்தான்
Share
Tweet
SendShare
Previous Post

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

Next Post

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

Related News

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies