வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!
Sep 12, 2026, 05:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

Murugesan M by Murugesan M
Aug 5, 2025, 07:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையின் பிரதான பகுதிகளில் ஒன்றான வேளச்சேரிக்கென தனியாகப் பேருந்து நிலையம் இல்லாததது அப்பகுதி மக்களிடையே சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. பேருந்து நிலையம் அமைக்க ஒதுக்கிய இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவதாகப் புகார் எழுந்துள்ளது.

உயர்தர சிகிச்சைக்கான மருத்துவமனைகள், கார்ப்பரேட் ஐடி கம்பெனிகள், முன்னணி கட்டுமான நிறுவனங்கள் எனப் பலரும் சங்கமிக்கும் சென்னையின் ஹை கிளாஸ் சிட்டியாகத் திகழ்கிறது இந்த வேளச்சேரி. அத்தகைய வேளச்சேரிக்கு என பிரத்யேக ரயில் நிலையம் இருக்கும் நிலையில், தற்போது வரை அதற்கென தனி பேருந்து நிலையம் இல்லாதது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது

வேளச்சேரியில் பேருந்து நிலையம் அமைப்பதற்காக கைவேலி என்ற பகுதியில் கடந்த 1999 ஆம் ஆண்டு தமிழக அரசின் மூலமாகவே இடம் ஒதுக்கப்பட்டது. அங்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் ரயில் நிலையம், பணிமனை, தண்டவாளம் ஆகியவை போக சுமார் 22 ஏக்கர் நிலம் தற்போதுவரை காலியாகவே உள்ளது. தினசரி காலையில் விளையாட்டு மைதானமாகவும், இரவு நேரங்களில் சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறும் மைதானமாகவும் இந்த இடம் மாறிவருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பேருந்து நிலையம் அமைப்பதற்கான நிலம் ஒதுக்கியும் அதற்கான எந்தவித பணிகளும் நடைபெறாமல் இருப்பதால், ரயில் நிலையத்தில் இறங்கும் போது விஜயநகர் பேருந்து நிலையத்தை நாட வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர் பயணிகள்.

மந்தைவெளி, திருவான்மியூர், வடபழனி உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்திருக்கும் நிலையில்,  வேளச்சேரியில் மட்டும் பேருந்து நிலையம் என்பது அப்பகுதி மக்கள் மத்தியில் கானல் நீராகவே காட்சியளிக்கிறது.

நகரமயமாதலின் உச்சத்தை எட்டும் வகையில் வேளச்சேரி பெரிய வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில், அப்பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைகளின் ஒன்றான பேருந்து நிலையத்தை அமைத்து அதனைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

Tags: பேருந்து நிலையம்People of Velachery in pain: Commuters are suffering due to the lack of a bus standவேதனையில் வேளச்சேரி மக்கள்
Share
Tweet
SendShare
Previous Post

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

Next Post

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

Related News

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies