மூளையில் பொருத்தப்பட்ட கணினி சிப் - புதிய சாதனை படைத்த எலான் மஸ்க் நிறுவனம்!
Jul 29, 2026, 08:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

மூளையில் பொருத்தப்பட்ட கணினி சிப் – புதிய சாதனை படைத்த எலான் மஸ்க் நிறுவனம்!

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விபத்தில் உடல் உறுப்புகள் செயலிழந்த இளைஞர் ஒருவர், எலான் மஸ்கின் நிறுவனத்தின் உதவியுடன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

ஒருபுறம் மனித மூளை அளப்பரிய ஆற்றல் கொண்டதாக விளங்குகிறது. மறுபுறம் கணினி ஒட்டுமொத்த உலகையே கட்டுப்படுத்தும் இடம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த இரு ஆற்றல்களையும் ஒன்றிணைத்தால் மனிதகுலம் மேலும் பல உயரங்களை எட்டும் என நம்புகிறார் எலான் மஸ்க்.

இது குறித்து ஆய்வு செய்ய அவர்த் தொடங்கிய நிறுவனம்தான் நியூராலிங்க். மனித மூளைச் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மனித மூளையில் சிப் ஒன்றைப் பொருத்தி, கணினியுடன் இணைப்பது குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

தொடக்கத்தில் குரங்குகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை, பின்னர் மனிதர்களிடமும் நடத்தப்பட்டது. தற்போது அந்நிறுவனம் தனது ஆய்வில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் மூளையில் வெற்றிக்கரமாகக் கணினியின் சிப்பைப் பொருத்திய நியூராலிங்க், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது.

2016ம் ஆண்டு நோலண்ட் அர்பாக் என்ற இளைஞர் நீச்சல் பயிற்சியின்போது கீழே தவறி விழுந்தார். இதில் முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவரது தோள்பட்டைக்குக் கீழே உடல் செயலிழந்தது. இதனால், படுத்த படுக்கையான அவர், எந்த வேலையையும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனையடுத்து, அறுவைச் சிகிச்சை மூலம் அவரது மூளையில் நியூராலிங் சிப் பொருத்தப்பட்டது.

கடந்த 18 மாதங்களாகச் சிப்புடன் வாழ்ந்து வரும் அந்த இளைஞர், தனது அனுபங்களைப் பகிர்ந்துள்ளார். தற்போது தன்னால் இருந்த இடத்தில் இருந்தபடியே தொலைக்காட்சியை ஆன் செய்து பல்வேறு சேனல்களைப் பார்க்க முடிவதாகவும், ஏசியை ஆன் செய்ய முடிவதாகவும், கணிப்பொறியில் வீடியோ கேம் கூட விளையாட முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

அறுவைச் சிகிச்சைக்கு பின், தன்னால் நிறைய விஷயங்களைச் சுயமாக செய்ய முடிவதாகக் குறிப்பிட்டுள்ள அந்த இளைஞர், தனது வாழ்க்கையே தற்போது வேறு விதமாக மாறியுள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்தச் சிகிச்சையை செய்துகொண்ட முதல் நபர் என்பதில் பெருமையடைவதாகவும், தற்போது தன்னால் 10 மணி நேரம் வரைக் கணினி உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்த முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெகு விரைவில் சொந்தமாகத் தொழில் தொடங்கவும் உள்ளதாகத் தெரிவிக்கிறார் நோலண்ட் அர்பாக். நியூராலிங்கின் இந்த ஆய்வுகள் தொடர் வெற்றிகளைப் பெற்றால், விபத்துகளில் உடல் செயலிழப்பவர்கள், பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்கள் உள்ளிட்டோருக்கு அது ஒரு வரபிரசாதமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

Tags: மூளையில் பொருத்தப்பட்ட கணினி சிப்elonmuskComputer chip implanted in the brain - Elon Musk's company sets new recordபுதிய சாதனை படைத்த எலான் மஸ்க் நிறுவனம்
ShareTweetSendShare
Previous Post

மாயாஜால சுழலின் மாமன்னன்!

Next Post

“நாடுதான் முக்கியம் வர்த்தகம் 2ம் பட்சம்தான்” – எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் திட்டவட்டம்!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies