அரசியலிலும் கால் பதித்த செயற்கை நுண்ணறிவு : கட்சி தலைவராக AI நியமனம்!
Sep 14, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அரசியலிலும் கால் பதித்த செயற்கை நுண்ணறிவு : கட்சி தலைவராக AI நியமனம்!

Murugesan M by Murugesan M
Sep 21, 2025, 09:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நடிகர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் எனப் பலர் அரசியலில் கால் பதித்ததை நாம் பார்த்துள்ளோம். ஆனால், முதன்முறையாக ஏ.ஐ.யும் தற்போது அரசியலில் கால் பதித்துள்ளது. எங்கு நடந்தது இந்தச் சுவாரஸ்ய சம்பவம். இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..

ஜப்பானில் Path to Rebirth என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி உள்ளது. மேற்கு ஜப்பானில் முன்னாள் மேயராக இருந்த ஷின்ஜி இஷிமாரு என்பவர்  கடந்தாண்டு இந்தக் கட்சியை தொடங்கினார். ஜப்பானில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களில் போட்டியிட்ட இந்தக் கட்சி, தனித்துவமான ஆன்லைன் பிரச்சாரம் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தது.

குறிப்பாக, டோக்கியோவில் நடைபெற்ற ஆளுநர்  தேர்தலிலும் Path to Rebirth கட்சி களம் கண்டது. அசுரத்தனமான ஆன்லைன் பிரசாரத்தைப் பயன்படுத்தி இந்தக் கட்சி 2ஆவது இடத்தைப் பிடித்தது. தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே முக்கிய தேர்தலில் 2ம் இடம்பிடித்தது தேசிய அளவில் பேசுபொருளானது.

டோக்கியோ ஆளுநர் தேர்தலில் கிடைத்த அங்கீகாரத்தால் உற்சாகமடைந்த ஷின்ஜி இஷிமாரு, ஜப்பானில் நடைபெற்ற மேல்சபைத் தேர்தலும் போட்டியிட்டார். ஆனால், அவரது கட்சி இந்த முறைப் படுதோல்வியடைந்தது. எந்தத் தொகுதியிலும் வெற்றிக் கிடைக்கவில்லை.

இதனால், மனஉளைச்சல் அடைந்த அவர், தோலவிக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து, கோகி ஒகுமுரா என்ற 25 வயது இளைஞர் கட்சியின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவர்தான் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, அரசியல் உலகைத் திடுக்கிட செய்துள்ளார். Path to Rebirth கட்சியின் அடுத்த தலைவராக இனி மனிதர்கள் யாருக்கும் இருக்க மாட்டார்கள் எனவும், ஏஐ-தான் இனி தலைவராக இருந்து தங்களை எல்லாம் வழிநடத்த போகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த ஏஐ தலைவருக்கு, தான் உதவியாளராக செயல்பட போவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஜப்பானிய மக்கள் விலங்குகள் மீது கொண்டுள்ள அன்பை பிரதிபலிக்கும் வகையில், இந்த ஏஐ-க்கு பென்குயினின் வடிவம் வழங்கப்படும் என Path to Rebirth தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளை  போலவே, ஜப்பானிலும் அந்நாட்டுக் குடிமக்கள் மட்டும்தான் போட்டியிட முடியும். எனவே, Path to Rebirth கட்சியின் புதிய தலைவரான ஏஐ, எந்தத் தேர்தல்களிலும் போட்டியிடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை லட்சக்கணக்கான ஊழியர்களின் பணிகளை மட்டும் replace செய்து வந்த ஏஐ, தற்போது தலைமை  பொறுப்பில் இருப்பவர்களையும் replace செய்யத்தொடங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Path to RebirthjappanArtificial intelligence has entered politics: AI appointed as party leaderகட்சி தலைவராக AI நியமனம்ஜப்பானில் Path to Rebirth என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி
Share
Tweet
SendShare
Previous Post

ரஷ்யாவின் அடுத்த குறி : எஸ்டோனியாவில் வட்டமிட்ட போர் விமானங்கள்!

Next Post

நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் – மதுரை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு!

Related News

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies