தர்மக்கொடி பறக்குது, ஆனந்தக் கண்ணீர் பெருகுது! : நயினார் நாகேந்திரன்
Sep 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தர்மக்கொடி பறக்குது, ஆனந்தக் கண்ணீர் பெருகுது! : நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Nov 25, 2025, 06:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நரேந்திர மோடி என்னும் பாக்கியவான் நமது நாட்டை ஆள்வது நம் முன்னோர்கள் செய்த பெரும் பேறு என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இன்று உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள குழந்தை ராமர் கோவிலின் 161 அடி கோபுரத்தின் மீது அமைந்துள்ள 30 அடி உயரக் கம்பத்தில், பகவான் ஸ்ரீ ராமபிரான் பிறந்த சூரிய குலத்தைக் குறிக்கும் வகையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சூரியச்சின்னம் பொருந்திய தர்மக் கொடியை ஏற்றிய தருணங்கள், அனைத்து இந்துக்களையும் உணர்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டன.

எத்தனை போராட்டங்கள்? எத்தனை வலிகள்? எத்தனை கண்ணீர் துளிகள்? எத்தனை உயிர் பலிகள்? அத்தனைக்கும் இன்று பதில் கிடைத்து விட்டதாகவே தோன்றுகிறது. இந்துக்களின் பல நூற்றாண்டுகாலக் கனவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்ப்பித்து வரும் நமது பாரதப் பிரதமர் அவர்களுக்கு எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும், எத்தனை முறை வாழ்த்துகள் சொன்னாலும் போதாது.

இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் என்பதற்கேற்ப, 1990 ஆம் ஆண்டு ராம ரத யாத்திரையில் துவங்கிய நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இந்த வேள்விப் பயணம், இன்று பகவான் ஸ்ரீ ராமபிரான் பிறந்த அயோத்தி மண்ணில் அவருக்கான ஆலயத்தை எழுப்பி அதன்மீது தர்மக் கொடியேற்றும் வைபோகத்தில் வந்து நிற்கிறது. இப்பேற்பட்ட பாக்கியவான் நமது நாட்டை ஆள்வது நம் முன்னோர்கள் செய்த பெரும் பேறு என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: PM ModibjpAyothi ramar templeநரேந்திர மோடிஅயோத்தியில் ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
Share
Tweet
SendShare
Previous Post

மழையால் சேதமடைந்த சாலையை சீரமைத்த கிராம மக்கள்!

Next Post

கன்னியாகுமரி : கிராம நிர்வாக அலுவலரை ஆட்சியர் ஒருமையில் பேசியதாக புகார் – கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies