பாஜக மேலிடம் கொடுத்த புதிய "SURPRISE" : பாஜகவின் "மாஸ்டர் மூவ்" யார் இந்த நிதின் நபின்?
Sep 14, 2026, 02:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாஜக மேலிடம் கொடுத்த புதிய “SURPRISE” : பாஜகவின் “மாஸ்டர் மூவ்” யார் இந்த நிதின் நபின்?

Murugesan M by Murugesan M
Dec 16, 2025, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜகவின் தேசிய செயல் தலைவராக 45 வயதே ஆன நிதின் நபின் நியமிக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. யார் இந்த நிதின் நபின்? அவருக்கு இந்த முக்கிய பொறுப்பு வழங்கப்பட காரணம் என்ன? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம் .

எப்போதும் Surprise-களுக்குப் பெயர் போன கட்சி பாஜக. கட்சி மேலிடத்தின் அடுத்து மூவ் என்னவாக இருக்கும் என்பது, பாஜக நிர்வாகிகள் பலராலையே யூகிக்க முடியாது. உதாராணமாக, தமிழகத்தில் அதுவரை யாராலும் அறியப்படாமல் இருந்த அண்ணாமலையை, திடீரென மாநில தலைவராக்கி, அனைவரையும் கட்சி தலைமை ஆச்சரியப்பட வைத்தது. அண்ணாமலை யார், அவரது பின்னணி என்ன, அவர் ஏன் கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார் என்பதைப் பின்னர் அறிந்தபோதுதான், பாஜக மேலிடத்தின் தொலைநோக்கு பார்வைப் புரிந்தது.

தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசு துணைதலைவராக நியமிக்கப்பட்டதும் அந்த வகையைச் சேர்ந்ததுதான். இப்படி, பாஜக மேலிடம் கொடுத்த Surprise-கள் ஏராளம். அந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள பெயர்தான், நிதின் நபின். அவர்தான், தற்போது பாஜகவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் அவ்வளவாக அறியப்படாத நிதின் நபினுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது ஒரு ஆச்சரியம் என்றால், அவருக்கு வெறும் 45 வயதுதான் ஆகிறது என்பது அடுத்த ஆச்சரியம். அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களை வளர்த்தெடுக்கவும், அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கவும் ஏதுவாக, பாஜகத் தலைமை இந்த நியமனத்தைச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சரி, யார் இந்த நிதின் நபின்?

பீகார் மாநிலம் பட்னாவில் 1980ம் ஆண்டு பிறந்தவர் நிதின் நபின். இவரது தந்தையான நவின் கிஷோர்  பிரசாத் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கினார். அவரது மறைவுக்குப் பிறகு, 2006ம் ஆண்டு நிதின் நபின் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

பங்கியூர்  தொகுதியில் இதுவரை 5 முறைப் போட்டியிட்டுள்ள அவர், அனைத்து முறையும் வெற்றிவாகைச் சூடியுள்ளார். அதுவும் சாதாரண வாக்கு வித்தியாசத்தில் அல்ல. 5 முறையும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில்தான் தனது வெற்றியை அவர்  பதிவு செய்துள்ளார். அவர் தற்போது, பீகாரின் கட்டுமானத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.

நிதின் நபினின் தலைமைப்பண்பாலும், களப்பணியாலும் கவரப்பட்ட பாஜகத் தலைமை, அவரை 2019ம் ஆண்டு சிக்கிம் மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது. அந்தப் பணியை அவர் சிறப்பாக செய்து முடித்ததால், 2024ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநில தேர்தல் பொறுப்பாளர்ப் பொறுப்பையும் வழங்கியது. இதனிடையே, பீகார் மாநில பாஜக இளைஞரணி தலைவராகவும் பணியாற்றி, அதிகளவு இளைஞர்களை அவர் கட்சியில் இணைத்திருந்தார்.

இப்படி, தனக்கு வழங்கப்பட்ட அனைத்து வேலைகளைக் கனக்கச்சிதமாக செய்து முடித்தார் நிதின் நபின். எனவே, அவரது திறமையைத் தேசிய அளவில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், பாஜகவின் செயல் தலைவர்ப் பொறுப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

45 வயதான ஒருவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது, கட்சியில் உள்ள இளைஞர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்துவதாக அமையும். கட்சி தலைமை நம்மைக் கவனிக்கிறது, சற்று முயன்றால் நம்மாலும் தேசிய அளவிலான அங்கீகாரத்தைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்தும். இதன் மூலம், அடுத்த தலைமுறையைச் சேர்ந்த நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் உத்வேகத்தை ஏற்படுத்த பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், குடும்ப அரசியல் செய்யும் சில கட்சிகளைப் போல இல்லாமல், கட்சிக்காக யார் உழைத்தாலும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது பாஜக. பிராந்திய அளவிலும், தேசிய அளவிலும் அக்கட்சி பெற்று வரும் அசுரத்தனமான வெற்றிக்கும் இதுவும் ஒரு காரணம்.

Tags: bjp126th Flower Exhibition in Utkai! - Intensive maintenance work!New "SURPRISE" from BJP leadership: Who is this Nitin NabinBJP's "master move"?நிதின் நபின்
Share
Tweet
SendShare
Previous Post

ஐபிஎல் மினி ஏலம் : ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீனை ரூ.25.20 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி!

Next Post

பிரபல ஹாலிவுட் இயக்குநர், மனைவி கொடூர கொலை – சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப் பதிவு!

Related News

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தீர்த்தவாரி உற்சவம் – புனித நீராடி பக்தர்கள் வழிபாடு!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies