தவெக பெரும்பான்மையோடு வந்தால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க தயார் - ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்
May 8, 2026, 10:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக பெரும்பான்மையோடு வந்தால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க தயார் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

Ramamoorthy S by Ramamoorthy S
May 8, 2026, 06:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரும்பான்மையோடு வந்தால் நாளையே பதவிப்பிரமாணம் செய்து வைக்க தயாராக இருப்பதாக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தெரிவித்துள்ளார்.

ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த ஆளுநர், தமிழகத்தில் ஆட்சியமைக்க தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை அவசியம் என்றும்,
அதன் பின்னர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஆட்சியமைக்க உரிமை கோரி வருவோரிடம் தான் கேட்பது ஒன்றுதான், அது ஆட்சியமைக்க தேவையான உறுப்பினர்கள் உள்ளனரா என்பதுதான் என்றும் தெரிவித்தார்.

அதிமுக – திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வந்து ஆட்சியமைக்க உரிமை கோரினால் அனுமதி அளிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஆளுநர்,அப்படி வரும்போது அவர்களுக்கான எண்ணிக்கை உள்ளதா என்பதை பரிசீலனை செய்து முடிவு எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.

இன்று எண்ணிக்கையை கொண்டுவந்தால் நாளையே பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறேன் என்றும் ஆளுநர் உறுதிபடக் கூறினார்.மெஜாரிட்டி இல்லாதது விஜய்க்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்குமான பிரச்சினை என்றும், 118 இடங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

மைனாரிட்டி அரசு ஆட்சி அமைத்து குதிரை பேரம் நடத்துவதை அனுமதிக்க முடியாது எனக் கூறிய ஆளுநர், 118 எம்எல்ஏக்களை கண்முன் நிறுத்துங்கள் என்று நான் கூறவில்லை எனவும்

விஜய் பதவியேற்பை நான் தடுப்பதாக எப்படி சொல்ல முடியும்? எனவும் கேள்வி எழுப்பினார்.

விஜய் மெஜாரிட்டி எண்ணுடன் வந்தால் ஆட்சி அமைக்க அழைக்க தயார் எனவும் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த 2 அல்லது 3 நாட்களில் முடிவு எட்டப்படாவிட்டால் அடுத்த கட்ட முடிவுகள் குறித்து ஆலோசிப்பேன் எனக் கூறியுள்ள ஆளுநர்,எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் உத்தரவு தற்போதைய சூழலுக்கு பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: TVK MAJORITY ISSUEGovernor Rajendra ArlekarVijayTamil Nadu Assembly elections.Assembly Elections Tamil Nadutamil nadu assembly election 2026
ShareTweetSendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு – விமானப்படை வெளியிட்ட வீடியோ!

Next Post

கட்சி நலன் கருதி என்ன முடிவெடுத்தாலும் திமுக எம்எல்ஏக்கள் கட்டுப்பட வேண்டும் – ஸ்டாலின்

Related News

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

3வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

ஒரே இரவில் ஒன்றிணைந்த திராவிட கட்சிகள் – மாணிக்கம் தாகூர்

ஈரானின் ராணுவ நிலைகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

தவெக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா? – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்!

கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் – திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம்!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

தமிழக ஆளுநருடன் தலைமைச்செயலாளர், டிஜிபி சந்திப்பு – மாநில சட்டம் ஒழுங்கு குறித்து விளக்கம்!

கட்சி நலன் கருதி என்ன முடிவெடுத்தாலும் திமுக எம்எல்ஏக்கள் கட்டுப்பட வேண்டும் – ஸ்டாலின்

தவெக பெரும்பான்மையோடு வந்தால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க தயார் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies