தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 95 புள்ளி 2 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 8 லட்சத்து 27 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அண்மையில் முடிவடைந்தன. இந்தநிலையில் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் துறை இயக்குநரகம் வெளியிட்டது.
இதில் 95 புள்ளி 2 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
















