திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது - காதர் மொய்தீன்
Aug 5, 2026, 04:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது – காதர் மொய்தீன்

Ramamoorthy S by Ramamoorthy S
May 9, 2026, 06:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வரும் நிலையில், கூட்டணி தலைவரான ஸ்டாலின் எடுக்கும் முடிவை எந்தவித மறுப்புமின்றி ஆதரிப்போம் என ஐயூஎம்எல் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்ற போதிலும், பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைக்க முடியாமல் தவெக திணறி வருகிறது. இதற்கிடையே ஆட்சியமைக்க ஆதரவு கோரி திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை நாடிய தவெக-விற்கு, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கடிதங்களை வழங்கியுள்ளன.

இதேபோல, விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளிடமும் தவெக ஆதரவு கோரியிருந்த நிலையில், இரு கட்சிகளின் தலைவர்களான திருமாவளவன் மற்றும் காதர் மொய்தீன் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன், திமுக கூட்டணியிலேயே ஐயூஎம்எல் தொடர்ந்து அங்கம் வகித்து வருவதாகவும், கூட்டணியின் தலைவரான ஸ்டாலின் எடுக்கும் எந்த முடிவுக்கும் மறுப்பின்றி கட்டுப்படுவோம் என்றும் கூறினார்.

மற்றொருபுறம் விசிக-வும் இதுவரை தவெக-விற்கு ஆதரவு கடிதம் வழங்காத நிலையில், ஸ்டாலின் – திருமாவளவன் இடையேயான சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தவெக-விற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக விசிக-வின் உயர்நிலை கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்த நிலையில், திருமாவளவன் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், விசிக தரப்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், தவெக-விற்கு ஆதரவு அளிப்பது தொடர்பான அதிகாரபூர்வ முடிவை திருமாவளவன் இன்று தெரிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: tamil nadu assembly election 2026IUML President Kader MohideenDMKTamil Nadu Assembly elections.tamil nadu assembly elections 2026Assembly Elections Tamil Nadu
ShareTweetSendShare
Previous Post

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

Next Post

தவெக சார்பில் ஆளுநரிடம் போலி கடிதம் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies