திமுக தோல்வி எதிரொலி - பென் நிறுவனம் கலைப்பு?
Aug 5, 2026, 04:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக தோல்வி எதிரொலி – பென் நிறுவனம் கலைப்பு?

Ramamoorthy S by Ramamoorthy S
May 14, 2026, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுகவின் தேர்தல் தோல்விக்கு காரணமான ‘பென்’ நிறுவனம் உதயநிதியின் உத்தரவால் கலைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக திமுக தரப்பு வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலில், 2022ஆம் ஆண்டு திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனால் பென் நிறுவனம் தொடங்கப்பட்டது என்றும்,
ஆரம்பத்தில், மீடியா ஒருங்கிணைப்பு பணிகளை செய்த பென் நிறுவனம், மெல்ல மெல்ல திமுகவுக்குள் ஊடுருவியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களை கண்காணிக்கும் பணியை பென் நிறுவனம் மேற்கொண்டதால் யாராலும் வெளிப்படையாக பேச முடியவில்லை என்றும், ‘ஓரணியில் தமிழ்நாடு’ போன்ற வாசகங்கள் கொண்ட திட்டங்களை கட்சிக்குள் செயல்படுத்தி பென் நிறுவனம் தனது அதிகாரத்தை விரிவுபடுத்தியது எனவும் கூறப்பட்டுள்ளது.

திமுகவில் எல்லையற்ற அதிகாரம் கிடைத்ததால், கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக அறிக்கை அளித்து ஆட்களை மாற்றியதுடன், தேவையான ஆட்களை நியமித்து கொண்டது என்றும்,
திமுக தலைமைக்கு தெரிந்துவிடக் கூடாது என கருதிய பென் நிறுவன அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை கைக்குள் போட்டு கொண்டு, தவறான அறிக்கைகளை கட்சிக்கு அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பென் நிறுவனத்தின் செயல்பாடுகளை திமுக தலைவர் ஸ்டாலின் நம்பியதாகவும்,
ஆரம்பத்தில் இருந்தே உதயநிதிக்கு பென் செயல்பாடுகள் பிடிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவில் பென் நிறுவனம் பரிந்துரைத்த 95 சதவீதம் வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர் என்றும், கடந்த 4ஆம் தேதி ஸ்டாலின் வீட்டில் நடந்த கூட்டத்தில் ‘பென்’ நிறுவனம் செய்த தவறுகள் குறித்து, உதயநிதி மிக கோபமாக பேசியதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், உதயநிதியின் உத்தரவின்படி பென் நிறுவனம் கலைக்கப்பட்டதாகவும், சபரீசனின் சகோதரி நடத்தி வந்த ‘குன்’ நிறுவனமும் கலைக்கப்படவுள்ளதாகவும் திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: dmk electoral defeatDMK"SabareesanTamil Nadu Assembly elections.tamil nadu assembly election 2026DMK LOSTPenn' firm
ShareTweetSendShare
Previous Post

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணை கண்காணிப்புக் குழு ஆய்வு!

Next Post

மே மாத மகளிர் உரிமைத்தொகை விரைவில் வரவு வைக்கப்படும் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies