பிரதமர் மோடி முன்னிலையில் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்து : இந்தியா - நெதர்லாந்து உறவில் புதிய அத்தியாயம் : சிறப்பு தொகுப்பு!
Oct 17, 2026, 05:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி முன்னிலையில் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்து : இந்தியா – நெதர்லாந்து உறவில் புதிய அத்தியாயம் : சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 18, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா – நெதர்லாந்து நாடுகளுக்கு இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெத்தாகி உள்ளது. பாதுகாப்பு, முதலீடு, கனிமவளம் போன்ற துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருநாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுவடைந்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்….

இரண்டு நாள் பயணமாக நெதர்லாந்தின் ஹேக் நகருக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ராப் ஜெட்டனுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதன் பயனாக இருநாடுகளுக்கும் இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் டாடா நிறுவனமும், நெதர்லாந்தின் ஏ.எஸ்.எம்.எல் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம், குஜராத்தின் தோலேராவில் அமையவிருக்கும் அதிநவீன செமிகண்டக்டர் தொழிற்சாலைக்கு நெதர்லாந்து தனது தொழில்நுட்ப ஆதரவை வழங்கவுள்ளது.

இது தவிர்த்து மேலும் பல முக்கிய ஒப்பந்தங்களும் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகியுள்ளது. அதன்படி 2030-ம் ஆண்டு வரை வர்த்தகம், பாதுகாப்பு, விண்வெளி, முதலீடு, செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அரிய வகை தாதுக்களின் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும், இந்தியாவின் சுரங்கம் மற்றும் தாதுப்பதப்படுத்தும் திறனை மேம்படுத்தவும் நெதர்லாந்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்திய மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் நெதர்லாந்தில் படிக்கவும், வேலை செய்யவும் ஏதுவாக விசா விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது.

மேற்கு திரிபுராவில் மலரியல் மேம்பாட்டிற்கான ‘சிறப்பு மையம்’ அமைக்கவும், பெங்களூருவில் நவீன பால்வளப் பயிற்சி மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் நெதர்லாந்து உதவியுடன் மேற்கொள்ளப்பட உள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் எதிர்கால மருத்துவ சவால்களை எதிர்கொள்வதற்கான கூட்டு ஆராய்ச்சிக்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அதுகுறித்த ஒப்பந்தமும் கையெழுதாகியுள்ளது.

எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், ஐரோப்பிய நாடுகளுக்கு பசுமை ஹைட்ரஜனை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் இந்தியாவுக்கு உருவாகியுள்ளது.

பிரதமரின் நெதர்லாந்து பயணம் இரு நாடுகளின் பொருளாதார விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதுடன், இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

Tags: DholeraIndiagujaratprime minister modiNetherlandSeventeen key agreementsPrime Minister Mark Rutte.
Share
Tweet
SendShare
Previous Post

சோழர் பெருமையை மீட்டெடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டு கூட தெரிவிக்காமல் இருப்பது தான் நாகரிக அரசியலா? – வானதி சீனிவாசன் கேள்வி!

Next Post

17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies