தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டிக்கொள்ள வேண்டும் எனவும், மீண்டும் தேர்தல் வந்தால் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும் என்றும் அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
நாமக்கலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மீண்டும் தேர்தல் வந்தால் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும் என தெரிவித்தார். தமிழகத்தை அதிகமுறை ஆண்ட கட்சி 108 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மக்கள் தீர்ப்பை ஏற்று திமுக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
















