ரீல்ஸ்களிலிருந்து விடுபட்டு எப்போது ரியாலிட்டிக்கு வருவீர்கள் என முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருவாரூர் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடலை எலிகள் கடித்துக் குதறிய கொடூரம் சம்பவம் அரங்கேறியுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், சீர்காழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் மின்வெட்டு காரணமாகக் கர்ப்பிணிப் பெண் மயக்கமடைந்த அவலம் நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும், ஏழை, எளிய மக்கள் நம்பியிருக்கும் அரசு மருத்துவமனைகளின் இந்த அவல நிலை, பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அமைச்சர்களும், தவெக நிர்வாகிகளும் மருத்துவரைப் போல வெள்ளைக்கோட் அணிந்து கொண்டு, ஆய்வு என்ற பெயரில் ‘பேக்ரவுண்ட் மியூசிக்’ உடன் வீடியோக்களை வெளியிடுவதில் மட்டுமே குறியாக உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ரீல்ஸ்களிலிருந்து விடுபட்டு எப்போது ரியாலிட்டிக்கு வருவீர்கள் என முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
















