பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் - சிறப்பு தொகுப்பு!
Aug 5, 2026, 04:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 13, 2026, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு காலத்தில் இந்தியாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய பாகிஸ்தானால் பயன்படுத்தப்பட்ட ஆசாத் காஷ்மீர் மக்கள், தற்போது பாகிஸ்தானுக்கு எதிராகவே திரும்பியுள்ளனர். உலக அரங்கில் பாகிஸ்தானின் உண்மை முகத்தை அவர்கள் அம்பலப்படுத்தவும் தொடங்கியுள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது விரிவாக பார்க்கலாம்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மிர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை, பாகிஸ்தான் அரசு தொடக்கம் முதலே தனது துருப்பு சீட்டாக பயன்படுத்தி வந்தது. அங்கு வசித்த மக்களை மூளைச்சலவை செய்து, இந்தியாவுக்கு எதிராகவே கருத்துகளை தெரிவிக்க வைத்தது. ஆனால், அந்த குறிப்பிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள்தான் தற்போது பாகிஸ்தானுக்கு முதன்மை தலைவலியாக மாறியுள்ளனர்.

பாகிஸ்தானின் சூழ்ச்சி குறித்த இந்த வரலாறு 1961ம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. அந்த ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மிர்பூர் மாவட்டத்தில் மங்களா என்ற மிகப்பெரிய அணை கட்டும் பணி தொடங்கியது.

இந்த அணை சுமார் 3,140 மீட்டர் நீளமும், 147 மீட்டர் உயரமும் கொண்டது என்பதால், சுமார் 280 கிராம மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டது. அத்துடன், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வேறு பகுதிக்கு இடம்பெயர வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

அந்த சமயத்தில் இந்த அணை கட்டுமானத்தில் பிரிட்டன் அரசும் ஒரு முக்கியப் பொறுப்பாளராக இருந்தது. எனவே, அணைக்காக தங்களது நிலங்களை இழந்த மக்கள் தனது நாட்டிற்கு வந்து வேலை செய்வதற்கான பணி அனுமதி விசாக்களை பிரிட்டன் வழங்கியது.

இதன் மூலம் மிர்பூர் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் லண்டன் உள்ளிட்ட நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர். நாளடைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தங்களது உறவினர்களையும் இங்கிலாந்துக்கு அழைத்து கொண்டனர். இன்றைய தேதிக்கு பிரிட்டனில் வாழும் ஒட்டுமொத்த பாகிஸ்தானிய வம்சாவளியினரில் 70% பேர் இவ்வாறாக அங்கு சென்றவர்கள்தான்.

இங்கிலாந்து சென்ற இந்த மக்கள் வெறும் உடல் உழைப்பாளர்களாக மட்டும் இருந்துவிடவில்லை. அந்நாட்டு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் முடிவுகளைத் தீர்மானிக்கும் பிரதான சக்தியாக உருவெடுத்தனர். முக்கிய வாக்கு வங்கியாகவும் மாறினர்.

இந்த இடத்தில்தான் பாகிஸ்தான் அரசு தனது சூழ்ச்சி வலையை விரித்தது. லண்டன் உள்ளிட்ட முக்கிய பகுதியில் வாழ்ந்து வந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை மூளை சலவை செய்து, இந்தியாவுக்கு எதிராக பேச வைத்தது.

அந்த மக்களை கொண்டு இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களையும், பேரணிகளையும் ஒருங்கிணைத்தது. பிரிட்டிஷ் அரசியல்வாதிகளும் அம்மக்களின் வாக்குகளை பெற, இந்தியாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசவும் தொடங்கினர்.

இவ்வாறாக, காஷ்மீர் மக்கள் இந்தியாவுக்கு எதிராகவும், தங்களுக்கு ஆதரவாகவும் உள்ளது போன்ற ஒரு தோற்றத்தை உலகளவில் உருவாகியது பாகிஸ்தான்.

இந்த சூழலில்தான், பாகிஸ்தானின் தவறானப் பொருளாதார கொள்கைகளால் மிர்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் கடும் சிக்கலை சந்திக்க தொடங்கினர். கோதுமை மாவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை தொடவே, அவர்கள் அனைவரும் வீதிக்கு வந்து போராட தொடங்கினர்.

காஷ்மீரிகளின் உரிமைக்காக பாடுபட்டு வருவதாக இதுவரை நடித்து வந்த பாகிஸ்தான், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை உடனே ஒடுக்க தொடங்கியது. அவர்களின் அரசியல் உரிமைகளையும் நசுக்க ஆரம்பித்தது.

மிர்பூர் உள்ளிட்ட மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தபோது, பாகிஸ்தான் அரசு கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி பலரை கொன்று குவித்தது.

பாகிஸ்தானின் இந்த இரட்டை வேடத்தையும், சொந்த மக்கள் மீதான அடுக்குமுறையையும் கவனித்த இங்கிலாந்துவாழ் மிர்பூர் மக்கள் கொதித்தெழுத்தனர். பாகிஸ்தான் அரசு இத்தனை நாளாக தங்களை பகடை காயாக மட்டுமே பயன்படுத்தி வந்தது என்பதையும் அவர்கள் புரிந்துகொண்டனர்.

இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக, அவர்கள் தற்போது பிரிட்டனில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர். பாகிஸ்தானின் உண்மை முகத்தை உலக அரங்கில் அவர்கள் அம்பலப்படுத்தவும் ஆரம்பித்துள்ளனர்.

ஒரு காலத்தில், இந்தியா குறித்த வதந்திகளை பரப்ப பாகிஸ்தான் அரசு எந்த மக்களை ஆயுதமாக பயன்படுத்தியதோ, அந்த மக்களே தற்போது பாகிஸ்தானின் அஸ்திவாரத்தை அசைக்க தொடங்கியுள்ளனர்.

Tags: MirpurPakistan-Occupied Kashmir protestMangla Dam bIndiapakistanPoKPakistan-occupied Kashmir
ShareTweetSendShare
Previous Post

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

Next Post

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies