ஈரான்- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து - வளைகுடாவில் திரும்புமா அமைதி? - சிறப்பு தொகுப்பு!
Aug 5, 2026, 04:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான்- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து – வளைகுடாவில் திரும்புமா அமைதி? – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 18, 2026, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான்-அமெரிக்கா இடையே ஒரு குறிப்பிடத்தக்க ராஜதந்திர நடவடிக்கையாக 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு இடையிலான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்” என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்ட இந்த ஆவணத்தில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கி 110 நாட்களுக்குப் பிறகு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாகும் என்று அறிவிக்கப்பட்டதற்கு ஒரு நாள் முன்னதாகவே பிரான்ஸில் நடந்த ஜி 7 உச்சிமாநாட்டில் பிரான்ஸ் அதிபர் கொடுத்த இரவு விருந்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எலக்ட்ரானிக் முறையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நேரத்தில் ஈரான் அதிபர் பெஷாக்கிடும் கையெழுத்திட்டார்.

நீடித்த அமைதிக்கு வழிவகுப்பதோடு, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும், மக்களுக்காக சரியான திசையில் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கையான இந்த ஒப்பந்தம் விரைவில் எரிசக்தி விலை குறைக்க உதவும் என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

கையெழுத்தான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் செயல்பாட்டைச் சோதித்துப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது என்று ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தம், தடைகளை படிப்படியாகத் தளர்த்துவதற்கான ஒரு செயல்திட்டத்தையும், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிப்பதையும், ஈரானிய எண்ணெய் ஏற்றுமதியை அனுமதிக்கும் கருவூல விலக்குகளையும் கொண்டுள்ளது. உடனடியாக நடைமுறைக்கு வந்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அடுத்த 60 நாட்களுக்குள் ஒரு விரிவான தீர்வை எட்டுவதற்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

வர்த்தகக் கப்பல்கள் எவ்விதக் கட்டணமுமின்றிப் பாதுகாப்பாகச் செல்வதற்கு ஹார்முஸ் ஜலசந்தியைத் உடனடியாகத் திறக்கவும், அணு ஆயுதம் தயாரிப்பதற்கேற்ற தரத்தில் ஈரான் சேமித்து வைத்துள்ள யுரேனியத்தை அழிப்பதற்கு ஈரானை ஒப்புக்கொள்ள வைக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்களை உருவாக்கவோ கையகப்படுத்தவோ மாட்டோம் என்ற தனது உறுதிப்பாட்டை ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாகவும் அதன் படி சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) மேற்பார்வையின் கீழ் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்புகள் மேலாண்மை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தான 30 நாட்களுக்குள் ஈரான் எல்லைப் பகுதிகளிலிருந்து தனது படைகளை அமெரிக்கா திரும்பப் பெறுவதற்கும், ஈரான் மீதான பொருளாதார தடைகள் உட்பட அந்நாட்டு எண்ணெய் ஏற்றுமதிக்கான தடைகளைப் படிப்படியாகத் தளர்த்துவதற்கும் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது.

குறிப்பாக, 300 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறையாத மதிப்புள்ள பொருளாதார மேம்பாட்டுத் நிதி வழங்கும் திட்டமும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது.

DEATH TO AMERICA என்று ஓயாமல் முழங்கி வந்த ஈரான், அதே அமெரிக்காவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது நீண்ட கால தீர்வுக்கான தீர்க்கமான ராஜ தந்திர முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

Tags: us iran war liveiran war updateiran war latestisrael us iran waramerica vs iran warTRUMP SIGNED DEALiran warStrait of HormuzIran-US wariran war news
ShareTweetSendShare
Previous Post

பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம் : விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!

Next Post

மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது; நாளை தனி தீர்மானம்

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies