திருச்சி காவிரி பாலம் 3 மாதத்திற்கு மூடல் - போக்குவரத்து மாற்றம்!
Sep 27, 2026, 11:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி காவிரி பாலம் 3 மாதத்திற்கு மூடல் – போக்குவரத்து மாற்றம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2026, 11:04 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி காவிரி பாலம் 3 மாதத்திற்கு மூடப்படும் நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது.

திருச்சி மாநகரில் அதிக போக்குவரத்து நிறைந்த சாலைகளில் ஒன்றாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது. இச்சாலையில், காவிரி ஆற்றின் குறுக்கே பழமையான பாலம், புதிய பாலங்கள் உள்ளது. மதுரையில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் சாலையில் ஒரு வழிபாதையாக பழைய காவிரி பாலமும், சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரை, நெல்லை செல்லும் வாகனங்கள் அனைத்தும் புதிய பாலத்தின் வழியாக ஒரு வழிப்பாதையில் செல்கின்றது.

இதுதவிர, மாநகரில் உள்ள அனைத்து பொதுமக்களும் போக்குவரத்துக்கு இப்பாலங்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி ஸ்ரீரங்கம் இடையே அமைந்துள்ள பழைய காவிரி பாலத்தை வலுப்படுத்தும் பணிகள் பராமரிப்பு வகையில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்.. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள காவிரி பழைய பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நேற்று ஜூன் -25 ஆம் தேதி நள்ளிரவு முதல் பாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

மேலும் திருச்சி – சென்னை தேசிய நெஞ்சாலையில் அமைந்துள்ள பழைய காவிரி பாலம் கட்டப்பட்டு 63 ஆண்டுகள் ஆகிறது. ஆங்காங்கே பழுது ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டாலும், அதில் உள்ள பேரிங்குகள் சேதமடைந்துள்ளது. அதனால், பாலம் முழுக்க உள்ள 170 பேரிங்குகள் முழுமையாக மாற்றி, பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளவும், 3 மாதங்களுக்குள் இப்பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதுவரை, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் ஸ்ரீரங்கம் பகுதிகளை இணைக்கும் பழைய காவிரி பாலம் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு பாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம் :

பராமரிப்பு பணிகளுக்காக பாலம் மூடப்பட உள்ளதால், திருச்சியிலிருந்து சென்னை வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் சஞ்சீவி நகரிலிருந்து புதிய காவிரி பாலம், கொண்டையம்பேட்டை வழியாகவும், சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வரும் வாகனங்கள் சா்க்காா்பாளையம் அணுகுசாலை, கொண்டையம்பேட்டை, புதிய காவிரி பாலம், சஞ்சீவி நகா் வழியாகவும் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags: Trichy-Chennai National Highwaytrichymaintenance workTraffic Diversionold Cauvery Bridge close
Share
Tweet
SendShare
Previous Post

டாஸ்மாக் கடைகளை தனியாருக்கு வழங்கும் திட்டம் இல்லை – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

Next Post

ரூ.284 கோடி மதிப்பிலான நடைபாதை திட்ட பணி டெண்டர்கள் ரத்து – சென்னை மாநகராட்சி நடவடிக்கை!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies