மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு பதவியா? தவெக.தொண்டர்கள் அதிருப்தி - சிறப்பு தொகுப்பு!
Sep 28, 2026, 12:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு பதவியா? தவெக.தொண்டர்கள் அதிருப்தி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தவெகவில் புதியதாக இணையும் மாற்றுக்கட்சியினருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஏற்கனவே உள்ள நிர்வாகிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி பூசல் தவெகவை நம்பி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 4 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்து வெற்றிபெற்ற காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக கட்சியில் இணைந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய போதே எழுந்த எதிர்ப்புக் குரல் தற்போது அதிமுகவினர் இணையும் போது வலுக்கத் தொடங்கியுள்ளது.

மாற்றுக் கட்சியில் இருந்து வந்த 106 பேருக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதால் தவெகவைச் சேர்ந்த 62 மாவட்டச் செயலாளர்கள் உட்பட விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து உழைத்தவர்களுக்கு வாய்ப்பில்லாத சூழல் நிலவியது. அதோடு தேர்தலில் வெற்றி பெற்றபின் மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களில் 7 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதும் தவெகவுக்குள்ளான உட்கட்சி பூசலை வலுப்படுத்த, தற்போது அதிமுகவில் இருந்து சாரை சாரையாக வரும் நிர்வாகிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பெரிய பூதாகரத்தை உண்டாக்கியுள்ளது.

தேர்தலில் போட்டியிடாதவர்கள் ஒருபுறமும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் அமைச்சர் பதவி கேட்டு மறுபுறமும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நான்கு MLA-க்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளது. மீண்டும் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை நம்பி வந்த இந்த நான்கு பேரும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது

விஜய் ரசிகர் மன்ற காலத்திலிருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து படிப்படியாக உழைத்து வரும் நிர்வாகிகளுக்கு மதிப்பளிக்காமல் மாற்றுக் கட்சியினருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கு வெளிப்படையாகவே சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர். புதியதாக வந்தவர்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால் இப்பிரச்னை மேலும் கொழுந்து விட்டு எரியும் என்ற தகவலும் கட்சித் தலைமைக்கு சென்றுள்ளது. எனவே புதியதாக வந்தவர்களை சிறிது காலம் ஓரங்கட்டி வைத்துவிட்டு பழைய நிர்வாகிகளை அனுசரித்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் முடிவுக்கு தவெக தலைமை முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: tvkAnandtamilga vetri kalagamjoining TVK from other partiestvk cadresDMKVijayaiadmk
Share
Tweet
SendShare
Previous Post

காவிரி – கோதாவரி இணைப்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – அன்புமணி வேண்டுகோள்!

Next Post

லெப்பாய் பிரிவில் சான்றிதழ் வழங்க முடியாது; நீதிமன்றம் உத்தரவு

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies