மாநில உரிமைகளை பற்றி காங்கிரஸ் பேசுவதா? - நயினார் நாகேந்திரன் கேள்வி
Aug 5, 2026, 04:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநில உரிமைகளை பற்றி காங்கிரஸ் பேசுவதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 8, 2026, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூட்டாட்சி தத்துவத்தை தீயிட்டு கொளுத்திய காங். தற்போது மாநில உரிமைகளை பற்றி பேசுவதா என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், பாஜக தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தின் எந்த உரிமைகளை பறித்தது? என்ற எங்கள் நேரடிக் கேள்விக்கு பதில் கூற முடியாத நீங்கள், எங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி தலையை சுத்தி மூக்கைத் தொட முயன்று கொண்டிருக்கிறீர்கள் என தெரிவித்துள்ளார்.

நேஷனல் ஹெரால்டு உட்பட பல ஊழல் வழக்குகளில் சிக்கி, கடந்த 12 ஆண்டுகளாக அரியணையின் நிழலைக் கூட தொட முடியாமல் தோல்விக் கணக்கை மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் காரர்களுக்கு யாரைக் குறை கூறுவதற்கும் தகுதியில்லை என்பதே எங்கள் வாதம். இதில் என்ன அவதூறு கண்டீர்கள்? என்றும் அவர் வினவியுள்ளார்.

அதிலும் பழைய கூட்டணி பழக்கம் மாறாமல், ₹1 வரிக்கு 29 பைசா என்ற திமுகவின் அதே புளித்துப் போன பொய் பிரச்சாரத்தையே நீங்கள் இன்னும் நீட்டி முழக்கிக் கொண்டிருப்பதை பார்த்தால், காங்கிரஸ் இன்னும் “கோமா”வில் இருந்து மீளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

‘அதனால் தானோ என்னமோ, வேலை நாட்களை 125 ஆகவும், ஊதியத்தை 300- க்கும் அதிகமாகவும் உயர்த்திய “VB G RAM G” திட்டத்தினை உங்கள் புதிய கூட்டணிக் கட்சியான தவெக தலைமையிலான அரசு, வரவேற்று செயல்படுத்திக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? களநிலவரம் தெரியாமல் அத்திட்டத்தினை நீங்கள் எதிர்த்துக் கொண்டிருக்கிறீர்களே? Wake Up Sir! (விழித்துக் கொள்ளுங்கள்).

திரும்பவும் சொல்கிறேன்… கச்சத்தீவை தாரைவார்த்து தமிழக மீனவர்களை வஞ்சித்தது அன்றைய காங்கிரஸ் அரசாங்கத்தின் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள். எமர்ஜென்சி என்ற பெயரில் மாநிலங்களின் ஜனநாயகக் குரல்வளையை நெரித்ததும், Article 356 -ஐ பயன்படுத்தி 90 முறை மாநில அரசுகளை கவிழ்த்ததும் உங்கள் காங்கிரஸ் கட்சி. அதுமட்டுமன்றி காவிரி பங்கீட்டில் தமிழக மக்களுக்கு துரோகம் செய்தது உங்கள் காங்கிரஸ். முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழகத்தின் உரிமைகளை பிற மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்து துரோகம் செய்தது உங்கள் காங்கிரஸ்.

தற்போது மேகதாது அணை கட்டுவதாகக் கூறி தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்யத் துடித்துக் கொண்டிருப்பதும் உங்கள் காங்கிரஸ் கட்சியே என்றம் அவர் தெரிவித்துள்ளார்.

இப்படி ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு, கூட்டாட்சி தத்துவத்தை பலமுறை தீயிட்டு கொளுத்திய காங்கிரஸ் கட்சி, தற்போது மட்டும் மாநில உரிமைகளை பற்றி பேசுவது நியாயமா திரு. மாணிக்கம் தாகூர் அவர்களே?

அதிலும் எப்பொழுதெல்லாம் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் காவிரி, மேகதாது பிரச்சினைகளும் வருகின்றன. பல வருடங்கள் கழித்து தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள உங்கள் காங்கிரஸ் கட்சி, மக்களுக்கு நல்லது செய்வதை பற்றி யோசிக்காமல், தமிழக மக்களுக்கு மீண்டும் எப்படி துரோகம் செய்யலாம் என உள்ளே சிந்தித்துக் கொண்டு, வெளியே தமிழகத்தின் உரிமைகள் பற்றி பேசுவது “சாத்தான் வேதம் ஓதுவது” போலானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Manickam Tagorenainar nagendran press meetCongresstamilnadu bjp presidenttvktamilnadu bjp state president
ShareTweetSendShare
Previous Post

புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும் : அமைச்சர் வெங்கடரமணன் தகவல்!

Next Post

சென்னையில் பட்டா கத்தியுடன் காரில் சுற்றிய ரவுடியை பிடிக்க சென்ற எஸ்ஐ மீது தாக்குதல் – 3 பேர் கைது!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies