வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு - சிறப்பு தொகுப்பு!
Aug 5, 2026, 03:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 18, 2026, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த, மிசோரம் மாநிலத்தில் மற்றொரு ராணுவத் தளத்தை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன் முக்கியத்துவத்தை ஆராய்கிறது இந்த செய்தித்தொகுப்பு…….

இந்திய வரைபடத்தை உற்று நோக்கினால், ஒரு கோழியின் கழுத்தைப் போல மிகக் குறுகிய, ஒடுங்கிய நிலப்பகுதி தென்படும். அதுதான் மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரி வழித்தடம். ராணுவத்தில் இது ‘சிக்கன்ஸ் நெக்’ (Chicken’s Neck) என்று அழைக்கப்படுகிறது.

20 முதல் 22 கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்த சிறிய பாதைதான், அசாம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய 8 மாநிலங்களை இணைக்கும் ஒரே ஒரு தரைவழிப் போக்குவரத்திற்கான வழித்தடமாகும்.

இதன் வடக்கே நேபாளம் மற்றும் பூடான் நாடுகளும், தெற்கே வங்கதேசமும் எல்லைகளாக உள்ளன. போர்க் காலத்தில் எதிரி நாடுகள் குறுகிய அகலமுள்ள சிலிகுரி பாதையைத் தாக்கி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால், வடகிழக்கு மாநிலங்களுக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையிலான தொடர்பு ஒட்டுமொத்தமாகத் துண்டிக்கப்பட்டுவிடும். இதனால் இது இந்தியாவின் மிக முக்கியமான பாதுகாப்பு மையமாக கருதப்படுகிறது.

வங்கதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, அந்த நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்திற்கு வருகை வந்ததும், சீன நிறுவனங்கள் சிலிகுரிக்கு மிக அருகில் உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ள வங்கதேசத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதும், நாட்டின் வடகிழக்கு எல்லைப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மிசோரமின் பர்வா (Parva ) பகுதியில் நான்காவது ராணுவத் தளத்தை அமைப்பதற்கான திட்டங்களை இந்தியா பரிசீலித்து வருகிறது. இந்த புதிய தளம், நாட்டின் கிழக்கு எல்லைப் பகுதியில் ஒரு முழுமையான பாதுகாப்பு அரணை உருவாக்கும்.

‘சிக்கன்ஸ் நெக்’ என அழைக்கப்படும் சிலிகுரி வழித்தடத்தைப் பாதுகாக்க, மேற்கு வங்கத்தின் சோப்ரா(Chopra), பீகாரின் கிஷன்கஞ்ச்(Kishanganj), அசாமின் துப்ரி(Dhubri) ஆகிய இடங்களில் மூன்று புதிய ராணுவத் தளங்கள் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஏற்கனவே செயல்படும் 3 ராணுவத் தளங்கள் சிக்கன்ஸ் நெக் வழித்தடத்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை பாதுகாத்து வருகின்றன. இந்த நிலையில், மிசோரமின் பர்வாவில் அமைக்கப்படும் ராணுவத்தளம், சிலிகுரியின் தெற்குப் பகுதியைப் பாதுகாக்கும். இந்தியா, வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகள் சந்திக்கும் எல்லைப் பகுதிக்கு அருகில் பர்வா அமைந்துள்ளதால் இந்தியப் படைகள் ஒரே நேரத்தில் பல்வேறு திசைகளை கண்காணிக்க உதவும்.

இதனிடையே பாதுகாப்பு கட்டமைப்பை எல்லைப் பாதுகாப்புப் படை விரிவுபடுத்தி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், மிசோரம்-வங்கதேச எல்லையில் உள்ள 85 சோதனைச்சாவடிகளும் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளன.

அங்கு, வெடிகுண்டுத் தாக்குதலைத் தாங்கக்கூடிய பாதுகாப்பான தங்குமிடங்கள் மற்றும் நிலத்தடியில் இயங்கும் ஆயுதக் கிடங்குகள், ட்ரோன்களை ஏவுதல், ட்ரோன் எதிர்ப்பு கண்காணிப்பு, உளவுத் தகவல்களை விரைவாகப் பகிரும் டிஜிட்டல் நெட்வொர்க்குகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நாட்டின் எல்லைப்பகுதியில் கண்காணிப்பையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது இந்திய அரசு.

Tags: MizoramChicken's NeckBangladesh border.Siliguri Corridor
ShareTweetSendShare
Previous Post

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

Next Post

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies