சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!
Jul 27, 2026, 07:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 20, 2026, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சவூதி அரேபியாவுடனான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் போன்று எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டிற்கு ஈடாக பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து குவைத்துடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஈரான் போர் மீண்டும் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நேரத்தில் ஈரானின் ராணுவத்தளங்கள், ஏவுகணை சேமிப்பு, மாற்று ஏவு தளங்கள் மற்றும் மின்சக்தி நிலையங்கள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்களை நடத்தி வருகிறது. பதிலுக்கு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் எரிசக்தி உற்பத்தி மற்றும் சேமிப்பு தளங்களை ஈரான் தாக்கி வருகிறது.

இதற்கிடையே ஈரானுக்கு ஆதரவாக ஏமனில் செயல்பட்டுவரும் ஹெளதிகள், சவூதி அரேபியா மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர். ஏற்கெனவே சவூதியுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பாகிஸ்தான் வேறுவழியில்லாமல் ஈரானுக்கு எதிராக சவூதிக்கு ஆதரவாக களமிறங்கவேண்டிய நிலையில் உள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தற்காலிகப் போர் நிறுத்தத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட இடைத்தரகராக பணியாற்றிய பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தினால், அது ‘சிவப்பு கோட்டை’ தாண்டுவதாகும் என்று கடுமையாக எச்சரித்துள்ளது.

பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சவூதி அரேபியாவுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பும் தாக்குதலும் தனக்கு எதிரானதாகக் கருதி அதாவது ‘ஒருவர் மீதான ஆக்கிரமிப்பு, இருவர் மீதான தாக்குதல்’ என்ற அடிப்படையில் பாகிஸ்தான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வளைகுடாவில் ஈரானின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் போர் பாதுகாப்புக்காக உலகின் ஒரே இஸ்லாமிய அணுசக்தி நாடான பாகிஸ்தானுடன் குவைத் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் துருப்புகள், போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை நிலைநிறுத்துவது உட்பட, வலிமையான படைபலத்தை பாகிஸ்தானிடம் குவைத் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப் படுகிறது.

இதற்குப் பதிலாக, மேம்படுத்தப்பட்ட எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டு உதவிகளையும் மற்றும் பிணைக்கப்பட்ட எரிபொருள் சேமிப்பு வசதிகளையும் பாகிஸ்தான் எதிர்பார்ப்பதாக கூறப் படுகிறது.

பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், இந்த நேரத்தில் குவைத் எல்லையில் துருப்புகளை நிலைநிறுத்துவது குறித்து இன்னும் பரிசீலிக்கவில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

முன்னதாக, 2023ம் ஆண்டு முதல் பயிற்சி மற்றும் கூட்டுப் பயிற்சிகளுக்காக பாகிஸ்தானுடன் மிகவும் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தைக் குவைத் ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானும் குவைத்தும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியுமா என்பதல்ல கேள்வி. மாறாக, அதனால் வரும் விளைவுகளைப் பாகிஸ்தானால் தாங்க அல்லது தவிர்க்க முடியுமா என்பது தான் முக்கியமான கேள்வியாக உள்ளது.

 

Tags: Iran-US wariran war newsus iran war liveiran war updateiran war latestsecurity agreementUS military basespakistansaudi arabiakuwaitiran war
ShareTweetSendShare
Previous Post

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

Next Post

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

Related News

வினாத்தாள் கசியவிட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை – வருகிறது சட்ட திருத்தம்!

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் – அப்துல் கலாம்

வினாத்தாள் முறைகேடு சட்டத்திருத்த – மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More

அண்மைச் செய்திகள்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies