தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் - சிறப்பு தொகுப்பு!
Aug 5, 2026, 04:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 24, 2026, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

10 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அவசரகால நிதி உதவியை அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் போர் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஆற்றிய தூதரக பங்களிப்பைத் தொடர்ந்து, இந்த நிதி உதவியைப் பாகிஸ்தான் கேட்பதாக கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த ஏப்ரலில் ஒரே நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 3.5 பில்லியன் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்திய பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு பெருமளவில் சரிந்து வருகிறது.

இப்போதும் பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு சீனா மற்றும் சவூதி அரேபியா வழங்கும் தற்காலிக கடன்களையே பெரிதும் நம்பியுள்ளது.

கடந்த ஜனவரியில் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி 2021-ஆம் ஆண்டைப் போல இந்த ஆண்டின் ஆண்டின் இறுதிக்குள் 20 பில்லியன் டாலருக்கு குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சர்வதேச நிதியத்தின் 7 பில்லியன் டாலர் நிபந்தனை கடன் திட்டத்தின் கீழ் அரசு உள்ளது. இதற்காக நாட்டில் வரிகளை உயர்த்துவது, அரசுச் செலவுகளைக் குறைப்பது என சர்வதேச கடன் நிபந்தனைகளை நடைமுறைபடுத்தி வருகிறது.

இந்நிலையில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், தனது அந்நியச் செலாவணி கையிருப்பை பலப்படுத்தவும், நாணயத்தின் மதிப்பை காப்பாற்றவும் முயற்சி எடுத்து வருகிறது.

மிக அரிதாகவே பிற நாடுகளுக்கு வழங்கப்படும் அமெரிக்க நிதித்துறையின் அவசரகால நிதி உதவியைப் பெற கடந்த செவ்வாய் கிழமை அமெரிக்கக் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்டை சந்தித்த பாகிஸ்தானின் நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்புக் குறித்து இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும், அதிக அமெரிக்க முதலீட்டை ஊக்குவிப்பதற்கும்,புதிய வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதாக பாகிஸ்தான் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிதிஉதவி என்பது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வழங்கும் நிலையான கரன்சி ஸ்வாப் லைன்களில் இருந்து வேறுபட்டதாகும்.

உறுதியான டாலர் வரத்து அல்லது உத்தரவாதங்கள் மூலம் ஒரு நாட்டின் நாணயத்தையும் அந்நியச் செலாவணியையும் ஸ்திரப்படுத்தவே இந்த நிதியுதவியை அமெரிக்க கருவூலத் துறை செய்கிறது.

இதுவரை இந்த நிதியுதவியை 2002-ல் உருகுவே மற்றும் 2025-ல் அர்ஜென்டினாவும் அமெரிக்காவிடமிருந்து பெற்றுள்ளன.

ஏற்கெனவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குடும்பத்தின் வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்ஷியல் நிறுவனத்துடன் எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனைக்காக பாகிஸ்தான் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் ‘ரெகோ டிக்’ தங்க மற்றும் செப்புச் சுரங்கத் திட்டத்தில் அமெரிக்க ஏற்றுமதி-இறக்குமதி வங்கி 1.2 பில்லியன் டாலரை முதலீடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

கூடுதலாக நியூயார்க்கில் உள்ள பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்துக்கு சொந்தமான ரூஸ்வெல்ட் ஹோட்டலை மறுசீரமைக்கவும் ட்ரம்ப் நிர்வாகத்துடன் பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப் படுகிறது.

10 பில்லியன் டாலர் நிதி உதவிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்தால், அது பாகிஸ்தானுக்கு உடனடி பொருளாதார நிவாரணமாக அமைவதுடன், சர்வதேச அளவில் அந்நாட்டின் கடன் தரத்தையும் உயர்த்த உதவும் என்று கூறப்படுகிறது.

ட்ரம்ப் நிர்வாகத்துடன் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்தி வரும் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் அவசர நிதி உதவி என்பது பணப்புழக்கப் பாதுகாப்பை விட மேலானதாக கருதப் படுகிறது.

Tags: us iran war liveiran war updateiran war latestisrael us iran waramerica vs iran warpakistan loan$10 billion in emergency financial aidiran warStrait of HormuzIran-US wariran war news
ShareTweetSendShare
Previous Post

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

Next Post

பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்; ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பினார்

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies