டாஸ்மாக் நிதி முறைகேடு - தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
Aug 5, 2026, 04:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 29, 2026, 12:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்ட டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்ட சூரியம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மாவட்ட தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையிலான குழுவினர், மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படும் மதுபானங்களின் வரவு, கையிருப்பு மற்றும் விநியோகம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

மேலும், டாஸ்மாக் குடோனில் உள்ள பதிவுகள் மற்றும் அலுவலக ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பரிசோதித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, மதுபானங்கள் கொள்முதல், விற்பனை, தனியார் மதுக்கூடங்களுக்கு மதுபான விநியோகம், காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறுதல், அட்டை பெட்டிகள், பாட்டில் மூடிகள், ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் குறித்தும் ஆய்வு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆச்சிப்பட்டியில் உள்ள டாஸ்மாக் குடோன் மற்றும் மேளாளர் அலுவலகத்தில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். ஆச்சிப்பட்டி குடோனுக்கு பல்வேறு மாநிலங்களில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, சூலூர் ஆகிய பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தனியார் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

கல்லாக்கோட்டை, விராலிமலை, குன்னத்தூரில் தனியார் மதுபான ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஆட்சி காலத்தில் டாஸ்மாக்கிற்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டில் ஈடுபட்டுள்ளனர். ஆவணங்கள், கொள்முதல் பதிவுகள் மற்றும் தொடர்புடைய விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சோதனை நிறைவடைந்த பிறகே முறைகேடு நடந்ததா, அதன் அளவு என்ன என்பது குறித்து முழுமையான தகவல் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: DVAC officials raidPeelameduTASMAC corruptionDirectorate of Vigilance and Anti-Corruption.TASMAC district headquarters
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Next Post

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies