கேரளாவில் கொட்டி தீர்க்கும் மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
Aug 1, 2026, 03:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளாவில் கொட்டி தீர்க்கும் மழை – 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 1, 2026, 12:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பல்வேறு பகுதிகளில் கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இடுக்கி, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அடூர் மலைப்பகுதியில் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது மலையடிவாரத்தில் இருந்த வீட்டின் மீது மண் சரிந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், பலமணி நேரம் போராடி சுமதி என்பவரை சடலமாக கண்டெடுத்தனர். இதே போன்று அதே பகுதியில் நிகழ்ந்த மற்றொரு நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது

இடுக்கி மாவட்டத்தில் பெய்து கனமழை காரணமாக கல்லாறு குட்டி அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக அணையின் 5 மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு காரணமாக பெரியாறு ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இதனிடையே பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக “பம்பை” ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராணி டவுன் பகுதியில் முழங்கால் அளவுக்குமேல் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

பத்தனம்திட்டா மாவட்டம் ராணி டவுன் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய குடியிருப்பு வாசிகளை பேரிடர் மீட்பு படையினர் ரப்பர் படகுகள் மூலம் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags: red alertweather updatechennai metrological departmentKeralaraintamilnadu rainkerala rainrain update
ShareTweetSendShare
Previous Post

முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Next Post

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் – வெளிமாநில தொழிலாளர்கள் இருவர் பலி!

Related News

எல்லையில் சீனாவின் Mighty Dragon J-20 போர் விமானம் : இந்தியாவுக்கு அச்சுறுத்தலா? – சிறப்பு தொகுப்பு!

ஆந்திராவில் ரூ.5000 கோடி மதிப்பில் சர்வதேச விமான நிலையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

ஆர்பாட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை – டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் – வெளிமாநில தொழிலாளர்கள் இருவர் பலி!

முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நதிநீர் விவகாரம் – அனைத்து கட்சியினருடன் முதல்வர் விஜய் பிரதமரை சந்திக்க வேண்டும் என அன்புமணி வேண்டுகோள்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கொட்டி தீர்க்கும் மழை – 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 600 பேருக்கு விருது – முதலமைச்சர் விஜய் வழங்கினார்!

பிஎம் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிர்கட்சியினர் அவையை விட்டு வெளியேறி விட்டு விவாதிக்க நேரம் கொடுக்கவில்லை என்று சொல்லக்கூடாது – கிரண் ரிஜிஜூ

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை உறுப்பினர்கள் காக்க வேண்டும் – மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

பிறப்பு, இறப்பு பதிவு திருத்த மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

அவதூறுகள் எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது – பிரதமர் மோடி

அமெரிக்கா- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் : சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு 100 % கூடுதல் வரி : ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா செனட் சபை ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மர் : இந்தியாவின் மின்சாரப் புரட்சி, வல்லரசுகளுக்கு சவால் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies