தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 600 பேருக்கு விருது - முதலமைச்சர் விஜய் வழங்கினார்!
Sep 15, 2026, 01:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 600 பேருக்கு விருது – முதலமைச்சர் விஜய் வழங்கினார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 1, 2026, 09:46 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், காவலர்கள் உட்பட 600 பேருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய், பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் காவலர் பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பட்டு வேட்டி சட்டையுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். பின்னர், திறந்த ஜீப்பில் சென்று காவல்துறை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். கடலோர காவல்படை, சிங்கப்பெண் அதிரடிப்படையினர் கம்பீரமாக அணிவகுத்துச் சென்றனர்.

காவல்துறையில் சிறந்து விளங்கிய 600 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் மற்றும் முதலமைச்சர் பதக்கங்களை, முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கி கவுரவித்தார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு காவல்துறை மோப்பநாய் ராக்கி பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்ததுடன், பயிற்சியாளர்களின் உத்தரவிற்கு ஏற்ப சாகசங்களை செய்து அசத்தியது.

இந்நிகழ்வில் காவல்துறையினர் ரோந்து பணிக்காக புதிய வாகனங்களை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 96 ஹோண்டா யுனிகார்ன் மற்றும் 42 மகேந்திரா தார் ராக்ஸ் வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன.

தொடர்ந்து, பயங்கரவாதிகளிடம் இருந்து பணய கைதிகளை மீட்பது தொடர்பான ஒத்திகை நடைபெற்றது. மோப்ப நாய்களுடன் இணைந்து அதிதீவிர படையினர் தத்ரூபமாக நடித்து காட்டினர்.

இதைத்தொடர்ந்து போலீசாரின் பைக் சாகசங்களை முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரமிப்புடன் கண்டு வியந்தார்

நிகழ்ச்சியின் நிறைவாக, பதக்கம் வென்றவர்களுடன் முதலமைச்சர் விஜய் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். விழாவில் கலந்துகொண்டபின் சாலையில் நடந்து சென்ற முதலமைச்சர் விஜய், அங்கிருந்த மக்களை பார்த்து கையசைத்தார்.

Tags: cm vijay newscm vijay todaycm vijay eventcm vijay speechcm vijay latestcm vijay with militry dogcm vijay twittertamil nadu cm vijaycm vijay tvk newscm vijaycm vijay updatescm vijay tvkcm vijay live
Share
Tweet
SendShare
Previous Post

பிஎம் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

காவிரி நதிநீர் விவகாரம் – அனைத்து கட்சியினருடன் முதல்வர் விஜய் பிரதமரை சந்திக்க வேண்டும் என அன்புமணி வேண்டுகோள்!

Related News

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு : ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

மசூத் அஸார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி உயர்வு – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

விநாயகரை அவமதித்த தவெகவினரை கைது செய்க – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

முழு பயன்பாட்டுக்கு வந்தது 2,843 கி.மீ., நீள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்!

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா – 12 கோபுரங்களுக்கு பிரம்மாண்ட மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் – இபிஎஸ் நம்பிக்கை!

முதல்வரின் லண்டன் பயணத்தில் 12,300 கோடி முதலீடு ஈர்ப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

விடுமுறை முடிந்து பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள் – போதிய பேருந்துகள் இல்லாததால் அவதி!

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பின் போது பவர் கட்; மின்வாரியம் விளக்கம்

தமிழகத்தில் ரூ.11,000 கோடி ரூபாய் முதலீடு; முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்

தாக்குதலை தீவிரப்படுத்தும் ஹவுதி அமைப்பினர் : என்ன செய்யப்போகிறார் அதிபர் ட்ரம்ப்? – சிறப்பு கட்டுரை!

சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் வலதுகரம் Cai Qi : உற்றுநோக்கப்படும் இந்திய வருகை – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies