காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால், ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் கபினி அணைக்கு நீர்வரத்து 23 ஆயிரத்து 9 கன அடியாக அதிகரித்துள்ளது. கபினி அணை நிரம்ப இன்னும் ஒரு அடி மட்டுமே உள்ளதால், பாதுகாப்பு கருதி, 12 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால், தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டுவுக்கு இன்று காலை ஐந்தாயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து 8 ஆயிரத்து 500 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி தொடர்கிறது.
















