சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் முதல் முறையாக கொடியேற்றவுள்ளார்…
நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டு முதல் முறையாக தேசிய கொடியை ஏற்றி வைக்கவுள்ளார்.
முன்னதாக காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்கிறார். தொடர்ந்து தகைசால் தமிழர் விருது, அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது உள்ளிட்டவற்றையும் வழங்கவுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட உள்ளது… தொடர்ந்து முதலமைச்சர் விஜய் மக்களுக்காக உரையாற்றவுள்ள நிலையில், முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவை ஒட்டி சென்னை முழுவதும் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
















