கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடனை வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்களை வசூலிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், தொலைபேசி வாயிலாக நிலுவையில் உள்ள தங்களது பயிர்க்கடன்களை வசூலிக்க முயல்வதாக சில விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
பயிர்க்கடன் தொடர்பாக கூட்டுறவு சங்கத்தில் இருந்து எவரேனும் தொடர்புகொண்டால், அதுகுறித்து கூட்டுறவுத்துறையின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணில் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















