அரசு பதவிகளில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, டெல்லியில் உள்ள விநாயகர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வழிபாடு நடத்தினார்.
2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி முதன்முறையாக குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிரதமர் மோடி, மாநில மற்றும் மத்திய அளவில் தொடர்ந்து அரசுப் பொறுப்புகளை வகித்து வருகிறார். இந்நிலையில், 2026-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதியுடன் அரசு பதவிகளில் 25 ஆண்டுகளை பிரதமர் மோடி நிறைவு செய்துள்ளார்.
இதையொட்டி, நாடு முழுவதும் ரத்த தான முகாம்கள், தூய்மைப் பணிகள் உள்ளிட்ட மக்கள் சேவை நிகழ்ச்சிகளை பாஜக முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள விநாயகர் கோயிலில், பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு நடத்தினார். நாடு முழுவதும் உள்ள சக குடிமக்களின் மகிழ்ச்சி, வளம் மற்றும் நல்வாழ்வுக்காக விநாயகப் பெருமானிடம் பிரார்த்தனை செய்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
















