சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 383 பிஎஸ்-4 பேருந்துகளைப் பிற மாவட்டங்களுக்கு மாற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் புதிய மற்றும் குளிர்சாதனப் பேருந்துகளின் இயக்கத்தை அதிகரிக்க, 10 முதல் 15 ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ள பேருந்துகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 126 பேருந்துகளைக் கோரி விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் கடிதம் அனுப்பியுள்ளது.
மீதமுள்ள பேருந்துகளை மதுரை, கும்பகோணம், கோவை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பழைய பேருந்துகள் அடிக்கடி பழுதடையுமோ எனப் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே பழைய பேருந்துகளை மாற்றம் செய்யும் வெளியூர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சென்னைக்கு இணையாக மற்ற ஊர்களுக்கும் புதிய பேருந்துகளை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
















