பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!
Nov 28, 2026, 04:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 11, 2026, 11:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக சென்னை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பூங்கொத்து வழங்கியும், சால்வை அணிவித்தும் வரவேற்றார். தொடர்ந்து ஆளுநர் ராஜேந்திர அர்லேகரும் பிரதமர் மோடியை வரவேற்றார். இந்த நிகழ்வின்போது மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து போரூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி சாலை வலம் சென்றார். அப்போது சாலையின் இருபுறங்களிலும் கூடியிருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கைகளை அசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமரை தொடர்ந்து, காரில் சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் போரூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, மெட்ரோ ரயில் சேவை குறித்து பிரதமர் மோடிக்கு அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து 750 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தை முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதிய வழித்தடத்தில் முதற்கட்டமாக 11 நிலையங்களில் மெட்ரோ ரெயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பிரதமர் மோடி யுபிஐ பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தி, மெட்ரோ ரயில் பயணத்துக்கான டிக்கெட்டை பெற்றார். தொடர்ந்து, போரூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் வரை பிரதமர் மோடியும், முதலமைச்சர் விஜய்யும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். இந்தப் பயணத்தின்போது, பிரதமர் மோடிக்கு மெட்ரோ ரயிலின் சிறப்பம்சங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.

பின்னர், பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியும், முதலமைச்சர் விஜய்யும் சென்னை ஐஐடியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றனர்.

சென்னை ஐஐடி சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுங்கிலும் பாஜக தொண்டர்கள் மலர்களைத் தூவி உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது, பிரதமர் மோடி கைகளை அசைத்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Tags: pm modi songpm modi aartipm modi eventPM Modipm modi prayerspm modi livepm modi templepm modi newsMODI IN CHENNAIpm modi jipm modi delhipm modi putinpm modi bricspm modi upsc
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் ஓடும் பழைய பிஎஸ்-4 பேருந்துகளை பிற மாவட்டகளுக்கு மாற்ற திட்டம்!

Next Post

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

அன்பில் மகேஷ் தொடர்புடைய வழக்கு விசாரணையில் இருந்து விலகுகிறேன் – நீதிபதி அருள் முருகன் அறிவிப்பு!

பெரம்பூரில் முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தலாம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருப்பதி கோயிலுக்கு 121 கிலோ தங்க வைர நகைகள் – சென்னை ஜெயின் தம்பதி காணிக்கை!

புனரமைக்கப்பட்டு வரும் மதுரை ரயில் நிலையத்தில் தீபம் இடம்பெறும் – அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

மயக்க ஊசி செலுத்தியும் மயங்காத யானை – சக்கக்கொம்பனை பிடிக்கும் பணி தீவிரம்!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தொடர்பான வழக்கு – மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்!

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றாத தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; நாளை விசாரணை

தமிழர்களின் மனதை மாநில அரசு புண்படுத்தியுள்ளது; அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்

துணைவேந்தர்களை விரைந்து நியமிக்க வலியுறுத்தல்; முதலமைச்சருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கடிதம்

மீண்டும் பாஜக கூட்டணிக்கு வந்த சிரோமணி அகாலி தளம் : போதை இல்லாத மாநிலமாக பஞ்சாப் மாற்றப்படும் என அமித் ஷா உறுதி – சிறப்பு தொகுப்பு!

நகராட்சி நிர்வாக துறை டெண்டர் முறைகேடு – நேருவின் சகோதரர் உதவியாளர் கைது!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – ஆளுநரை சந்தித்த பின்னர் உதயநிதி பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies